தளபதி விஜய் படம் குறித்து ராஷ்மிகா மந்தனா வெளியிட்ட வீடியோ!

தளபதி விஜய் படம் குறித்து ராஷ்மிகா மந்தனா வெளியிட்ட வீடியோ!

பிரபல தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனா தமிழில் கார்த்தி நடித்த ’சுல்தான்’ திரைப்படத்தில் நாயகியாக நடித்து இருந்தார் என்பதும் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் தமிழ் மற்றும் தெலுங்கு படத்தில் அவர் நாயகியாக நடிக்கவிருக்கிறார் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் ராஷ்மிகா மந்தனாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு 20 மில்லியன் ஃபாலோயர்கள் கிடைத்துள்ளதை அடுத்து அவர் சிறப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தன்னுடைய முதல் புகைப்படம், தியேட்டரில் பார்த்த முதல் படம், தனக்கு முதலில் கிடைத்த விருது, முதலில் ஸ்டேஜில் ஆடிய நடனம், முதல் பாலிவுட் திரைப்படம் என்று பல ’முதல்’ விஷயங்களை அதில் குறிப்பிட்டுள்ளார்,

அதில் ராஷ்மிகா தான் திரையரங்கில் பார்த்த முதல் திரைப்படம் என்று தளபதி விஜய் மற்றும் த்ரிஷா நடித்த ’கில்லி’ திரைப்படத்தை குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ராஷ்மிகா மந்தனாவின் இந்த பதிவிற்கு சுமார் 15 லட்சம் லைக்ஸ்கள் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News

HOT GALLERIES