யோகிபாபுவின் அடுத்த பட ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்: வீரப்பனின் கதையா?

யோகிபாபுவின் அடுத்த பட ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்: வீரப்பனின் கதையா?

தமிழ் திரையுலகின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவரான யோகிபாபு ஒரு சில படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார் என்பதும் அவர் ஹீரோவாக நடித்த சில படங்கள் நல்ல வசூலையும் வெற்றியும் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் யோகி பாபு முக்கிய வேடத்தில் நடிக்கும் திரைப்படம் ஒன்றின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சற்றுமுன் வெளியாகி உள்ளது. கலைப்புலி எஸ் தாணு, இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் ஆகிய பிரபலங்கள் இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இந்த படத்திற்கு ‘வீரப்பனின் கஜானா’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

யோகிபாபு உடன் மொட்ட ராஜேந்திரன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள் என்பதும் இந்த படத்தை யாஷ் என்பவர் இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கோபி துரைசாமி ஒளிப்பதிவில், ஞானேஸ்வரன் இசையில், மணிகண்டன் படத்தொகுப்பில் உருவாகும் இந்த படத்தை பிரபாதிஷ் சம்ஸ் என்பவர் தயாரித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் விரைவில் வெளியாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

யோகிபாபு ஹீரோவாக நடித்து வரும் ‘வீரப்பனின் கஜானா’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரில் சந்தனக்கடத்தல் வீரப்பன் மற்றும் வீரப்பனை சுற்றி துப்பாக்கி மற்றும் குண்டுகள் இருப்பது போன்று உள்ளதால் இந்த படம் வீரப்பனின் கதையா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

LATEST News

Trending News

HOT GALLERIES