தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகும் அஸ்வின்...! 6 கதாநாயகிகள் கொண்ட படத்தில்....?

தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகும் அஸ்வின்...! 6 கதாநாயகிகள் கொண்ட படத்தில்....?

குக் வித் கோமாளி அஸ்வின் 'மீட் க்யூட்' என்ற புதிய ஆந்தாலஜி மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகவுள்ளார்.

தமிழில் ஒருசில குறும்படங்களிலும்,  திரைப்படங்களில் இணை நடிகராக நடித்து பிரபலமானவர் தான் அஸ்வின். இவருக்கு திருப்பு முனையாக அமைந்தது "குக் வித் கோமாளி" என்ற நிகழ்ச்சி தான். இதன் மூலம் ஏராளமான ரசிகர்களையும் தன் வசம் ஈர்த்துக்கொண்ட இவர், தற்போது படங்களில் வெகுபிஸியாக நடித்து வருகிறார். அண்மையில் இவரின் நடிப்பில் வெளியான ஆல்பம் பாடல்  சூப்பர் ஹிட் ஆனது.

 

இந்நிலையில் 6 கதாநாயகிகள் நடிக்கும் 'மீட் க்யூட்' வலைத்தொடரை பிரபல நடிகரான நாணி தயாரிக்க, அவரது தங்கை இந்த ஆந்தாலஜியை இயக்குகிறார். நடிகர் அஸ்வின் இதுகுறித்த தகவலை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் குறிப்பிட்டுள்ளார். சுனைனா, அதா சர்மா, அகன்ஷா சிங், ருஹானி சர்மா, சஞ்சிதா பூனாச்சா மற்றும் வர்ஷா பொல்லம்மா உள்ளிட்ட நடிகைகள் இதில் நடித்துள்ளனர்.

'மீட் க்யூட்'  என்ற இந்த தொடர் 5 கதைகளை உள்ளடக்கியது. சத்யராஜ் மற்றும் ரோகிணி போன்ற பிரபல தமிழ் நடிகர்களும் இதில் நடிக்கிறார்கள். ஓடிடி-யில்  ரிலீஸ்-ஆக்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News