ஓடிடி-க்கு தயாராகும் இயக்குனர் வஸந்த்-ன் திரைப்படம்....!
இயக்குனர் வஸந்த்-ன் "சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்" என்ற திரைப்படம் பிரபல ஓடிடி தளமான, சோனிலிவ்-ல் வெளிவர இருக்கிறது.
அசோகமித்ரன், ஆதவன், ஜெயமோகன் ஆகியோர் எழுதிய சிறுகதைகளை மையப்படுத்தி, எடுக்கப்பட்ட திரைப்படம் தான் இது. இயக்குனர் வஸந்த் எஸ் சாய் இயக்கத்தில் சில வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டு, திரையரங்குகளில் வராமல் இருந்த திரைப்படம் தான் சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும். இளையராஜா படத்திற்கு இசையமைக்க, வஸந்தே படத்தை தயாரித்துள்ளார். இப்படம் சில திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டாலும், திரையரங்கில் வெளியிட படத்தை வாங்குவதற்கு யாரும் முன்வரவில்லை. இந்தநிலையில் சோனிலிவ் இப்படத்தை வெளியிட முன்வந்துள்ளது.

நெட்பிளிக்ஸில் வெளியாகவிருக்கும் "நவரசா" என்ற ஆந்தாலஜியில், வஸந்த் இரு குறும்படத்தை இயக்கியுள்ளார், இது ஆகஸ்ட்-6 ஆம் தேதி வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.