முன்னாள் முதல்வர் பேரனுடன் நடந்த திருமண நிச்சயதார்த்தம் முறிவு: தமிழ் நடிகை அறிவிப்பு!

முன்னாள் முதல்வர் பேரனுடன் நடந்த திருமண நிச்சயதார்த்தம் முறிவு: தமிழ் நடிகை அறிவிப்பு!

முன்னாள் முதல்வர் பேரனுடன் நடந்த நிச்சயதார்த்தம் முறிந்து விட்டதாக தமிழ் நடிகை ஒருவர் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விக்ராந்த் நடித்த ’நெஞ்சில் துணிவிருந்தால்’ விஜய் தேவரகொண்டா நடித்த ’நோட்டா’ தனுஷ் நடித்த ’பட்டாஸ்’ உள்பட ஒருசில தமிழ் படங்களிலும் தெலுங்கு ஹிந்தி படங்களிலும் நடித்தவர் நடிகை மெஹ்ரீன் பிர்சாதா. இவருக்கும் அரியானா மாநில முன்னாள் முதல்வரின் பேரன் பவ்யா பிஷ்னோய் என்பவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

இந்த நிலையில் திருமண நாள் நெருங்கிக் கொண்டிருந்த நிலையில் திடீரென பவ்யா பிஷ்னோய் உள்பட அவரது குடும்பத்தினர் சிலருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதாகவும், இதனால் பவ்யா பிஷ்னோய் - மெஹ்ரீன் பிர்சாதா திருமணம் தள்ளி வைக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் தற்போது நடிகை மெஹ்ரீன் பிர்சாதா தனது சமூக வலைத்தளத்தில் பவ்யா பிஷ்னோய் உடன் நடந்த நிச்சயதார்த்தம் முறிந்து விட்டதாகவும் அவரை திருமணம் செய்யப்போவதில்லை என்றும் அறிவித்துள்ளார். மேலும் இது முழுக்க முழுக்க தன்னுடைய தனிப்பட்ட விஷயம் என்பதால் இதற்கு மேல் தனது ரசிகர்கள் விளக்கம் கேட்க மாட்டார்கள் என எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி இனி சினிமாவில் முழு கவனம் செலுத்தப் போவதாகவும் நல்ல படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

LATEST News

Trending News