வாத்தி கமிங் பாடலுக்கு நடனமாடிய பிகில் மற்றும் தர்பார் பட நடிகர்கள், ட்ரெண்டிங் வீடியோ!

வாத்தி கமிங் பாடலுக்கு நடனமாடிய பிகில் மற்றும் தர்பார் பட நடிகர்கள், ட்ரெண்டிங் வீடியோ!

தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஜனவரி மாதம் வெளியான திரைப்படம் தான் மாஸ்டர்.

பிளாக் பஸ்டர் ஹிட்டான இப்படம் இந்தியளவில் மிகவும் பிரபலமாகியுள்ளது. மேலும் ஹிந்தியிலும் இப்படத்தை சல்மான் கான் ரீமேக் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.

மாஸ்டர் திரைப்படம் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற முக்கிய காரணமாக அமைந்ததே அப்படத்தில் அமைந்துள்ள வாத்தி கமிங் பாடல் தான்.

மேலும் யூடியூப்பில் 200 மில்லியன்களை கடந்துள்ள இப்பாடல் உலகளவில் பல்வேறு ரசிகர்களையும் கவர்ந்து வருகிறது.

அந்த வகையில் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் ஒளிபரப்பாகி வரும் இந்த பாடல், தற்போது Colours டிவி-ன் ஒரு நடன நிகழ்ச்சியில் போடப்பட்டுள்ளது.

மேலும் இதற்கு தர்பார் பட நடிகர் சுனில் ஷெட்டி, பிகில் பட நடிகர் ஜாக்கி செராப் உள்ளிட்ட நட்சத்திரங்கள் ஸ்டேப் போட்டுள்ளனர். இதோ அந்த வீடியோ

LATEST News

Trending News

HOT GALLERIES