ஹிந்தியில் ரீமேக்காகும் ராட்சசன் திரைப்படம் - ஹீரோ யார் தெரியுமா

ஹிந்தியில் ரீமேக்காகும் ராட்சசன் திரைப்படம் - ஹீரோ யார் தெரியுமா

விஷ்ணு விஷால் நடித்து கடந்த 2018ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் ராட்சசன்.

சைக்கோ திரில்லர் கதைக்களம் கொண்டு உருவான இப்படத்தை. ராம்குமார் இயக்கி இருந்தார்.

தமிழில் ஹிட்டான இந்த படம் மற்ற மொழிகளிலும் ரீமேக் செய்யப்படுகிறது. அதன்படி ராட்சசன் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் பெல்லம்கொண்டா சீனிவாஸ் நடிக்கிறார்.

மேலும் இந்தியிலும் ராட்சசன் படத்தை ரீமேக் செய்கின்றனர். இந்தியில் விஷ்ணு விஷால் கதாபாத்திரத்தில் நடிப்பது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது.

முதலில் ஆயுஷ்மான் குரானா நடிக்க உள்ளதாக சொல்லப்பட்ட, நிலையில், பிரபல பாலிவுட் நடிகர் அக்‌ஷய்குமார் நடிக்க உள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. 

LATEST News

Trending News