மாஸ்டர் ஹிந்தி ரீமேக்கில் செய்யப்படவுள்ள முக்கிய மாற்றம், சல்மான் கான் எடுத்துள்ள அதிரடி முடிவு

மாஸ்டர் ஹிந்தி ரீமேக்கில் செய்யப்படவுள்ள முக்கிய மாற்றம், சல்மான் கான் எடுத்துள்ள அதிரடி முடிவு

தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஜனவரி மாதம் வெளியான திரைப்படம் தான் மாஸ்டர்.

மேலும் பிளாக் பஸ்டர் ஹிட்டான இப்படத்தை தற்போது ஹிந்தியில் ரீமேக் செய்வுள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் இப்படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமையை பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சல்மான் கான் வாங்கியுள்ளார்.

இப்படத்தைப் பார்த்த சல்மான் கான் படத்தில் உள்ள 'மாஸ்டர்' கதாபாத்திரத்தை மட்டும் அப்படியே வைத்துக் கொண்டு, 'மாஸ்டர் கதை'யை முற்றிலுமாக மாற்றச் சொல்லிவிட்டாராம்.

மேலும் 'மதுப்பிரியர் மாஸ்டர்' கதாபாத்திரம் தான் சல்மான் கானை வெகுவாகக் கவர்ந்துவிட்டதாம். இதுவரை அப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடித்ததில்லை. எனவே, அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்கவே அவர் அதிகம் விருப்பப்பட்டாராம். அதன் காரணமாகத்தான் அவர் படத்தின் ரீமேக் உரிமையையும் வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி தென்னிந்தியப் படங்களின் ரீமேக்கில் நடிக்க மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என சல்மான் கான் முடிவு செய்துள்ளாராம். அதன் காரணமாக தான் இந்த மாற்றம் என சொல்லப்படுகிறது.

LATEST News

Trending News

HOT GALLERIES