சின்னத்திரை, வெள்ளித்திரை ரசிகர்களுக்கு ஒரு சூப்பர் செய்தி - இனி கொண்டாட்டம் தான்

சின்னத்திரை, வெள்ளித்திரை ரசிகர்களுக்கு ஒரு சூப்பர் செய்தி - இனி கொண்டாட்டம் தான்

தமிழகத்தில் கடந்த 2 மாதங்களாக கொரோனா தொற்றின் இரண்டாவது அலை காரணமாக, சினிமா மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் நடைபெறாமல் இருந்தன.

இந்நிலையில் தற்போது அவற்றுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. வருகிற ஜூன் 21ஆம் தேதி முதல், அதிகபட்சம் 100 பேர் கொண்ட படப்பிடிப்பை நடத்த அனுமதி தரப்பட்டுள்ளது.

மேலும் படப்பிடிப்பில் கலந்துகொள்பவர்கள் அனைவரும் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

அதேபோல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளை நடத்தவும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

இந்த தகவல் சின்னத்திரை, வெள்ளித்திரை ரசிகர்களுக்கு சந்தோஷத்தை கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News