'ஆர்.ஆர்.ஆர்' படத்தின் ரகசியத்தை கசியவிட்ட நடிகை: சமூக வலைத்தளங்களில் பரபரப்பு!

'ஆர்.ஆர்.ஆர்' படத்தின் ரகசியத்தை கசியவிட்ட நடிகை: சமூக வலைத்தளங்களில் பரபரப்பு!

பிரமாண்ட இயக்குனர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கி வரும் ’ஆர்.ஆர்.ஆர்’ என்ற திரைப்படத்தின் ரகசியத்தை பிரபல நடிகை ஒருவர் கசிய விட்ட நிலையில், படக்குழுவினர் கேட்டுக் கொண்டதை அடுத்து அவர் அந்த பதிவை நீக்கி உள்ளதாக கூறப்படுகிறது

பிரம்மாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் தேஜா ஆகிய இருவரும் நடித்து வரும் திரைப்படம் ’ஆர்.ஆர்.ஆர்’. சுதந்திர போராட்ட வீரர்கள் குறித்த கதையம்சம் கொண்ட இந்தப் படம் பிரமாண்டமாக உருவாகி வருகிறது என்பதும் இந்திய திரையுலகின் முக்கிய நட்சத்திரங்களான அஜய் தேவ்கான், ஆலியா பட், ஸ்ரேயா உள்பட பலர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர் என்பதும் அது மட்டுமின்றி ஒருசில ஹாலிவுட் நட்சத்திரங்களும் இந்த படத்தில் நடித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

கீரவாணி இசையமைக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த நிலையில் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் ஐரிஷ் நடிகை அலிசான் டூடி என்பவர் தனது சமூக வலைத்தளத்தில் ’ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி 2021ஆம் ஆண்டு அக்டோபர் 8 என்று குறிப்பிட்டிருந்தார்

’ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் மிகவும் ரகசியமாக வைத்திருந்த நிலையில் திடீரென அவர் ரிலீஸ் தேதியை அறிவித்ததை கண்டு அதிர்ச்சியடைந்த படக்குழுவினர் அந்த பதிவை நீக்குமாறு கேட்டுக் கொண்டனர். இதனை அடுத்து அவர் உடனே நீக்கி விட்டார் இருப்பினும் இதனை ஸ்கிரீன்ஷாட் எடுத்த ரசிகர்கள் பலர் இதனை சமூக வலைதளங்களில் வைரல் ஆக்கி வருகின்றனர்

LATEST News

Trending News

HOT GALLERIES