மனைவியை தொடர்ந்து பாலிவுட்டில் அறிமுகமாகும் நடிகர் நாகசைதன்யா - அதுவம் இவருடைய படத்திலா

மனைவியை தொடர்ந்து பாலிவுட்டில் அறிமுகமாகும் நடிகர் நாகசைதன்யா - அதுவம் இவருடைய படத்திலா

முன்னணி நடிகை சமந்தாவின் நடிப்பில் சமீபத்தில் ஹிந்தியில் தி பேமிலி மேன் 2 எனும் வெப் சீரிஸ் வெளியானது, இதுவே பாலிவுட்டில் சமந்தாவின் அறிமுகம்.

இதனை தொடர்ந்து சமந்தாவின் கணவரும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகருமான நாகசைதன்யாவும் பாலிவுட்டில் அறிமுகமாக இருக்கிறாராம்.

ஹாலிவுட்டில் பிரபலமான ‘பாரஸ்ட் கம்ப்’ எனும் படத்தை தற்போது இந்தியில் ரீமேக் செய்கின்றனர்.

‘லால் சிங் சட்டா’ என தலைப்பிட்டுள்ள இப்படத்தில் அமீர் கான் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக கரீனா கபூர் நடிக்கிறார்.

மேலும் இதில் அமீர் கானின் நண்பராக நடிக்க ஒப்பந்தமான தமிழ் நடிகர் விஜய் சேதுபதி, பின்னர் கால்ஷீட் பிரச்சனை காரணமாக அப்படத்தில் இருந்து வெளியேறிவிட்டார்.

இதனால் தற்போது, விஜய் சேதுபதிக்கு பதிலாக அந்த கதாபாத்திரத்தில் நடிக்க, பிரபல தெலுங்கு நடிகரும், நடிகை சமந்தாவின் கணவருமான நாகசைதன்யா ஒப்பந்தமாகி உள்ளாராம்.

இதன்முலம் பாலிவுட்டில் அறிமுகமாக இருக்கிறார் நடிகர் நாகசைதன்யா.   

LATEST News

Trending News

HOT GALLERIES