48 ஆவது திருமண நாளைக் கொண்டாடும் பாலிவுட் நட்சத்திரத் தம்பதிகள்! திரையுலகினர் வாழ்த்து!

48 ஆவது திருமண நாளைக் கொண்டாடும் பாலிவுட் நட்சத்திரத் தம்பதிகள்! திரையுலகினர் வாழ்த்து!

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அபிதாப் பச்சன் மற்றும் ஜெயா தம்பதிகள் இருவரும் தங்களது 48 ஆவது திருமண நாளை இன்று கொண்டாடி வருகின்றனர். இதையடுத்து சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் அவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் அபிதாப் பச்சன் மற்றும் நடிகை ஜெயாவிற்கு கடந்த 1973 ஆம் ஆண்டு ஜுன் 3 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு சுவேதா என்ற மகளும் அபிஷேக் எனும் மகனும் உள்னர். இதில் அபிஷேக் தனது பெற்றோரை வழியைப் பின்பற்றி தற்போது பாலிவிட்டில் முன்னணி நடிகராக வலம் வருகிறார் என்பது போன்ற தகவல்கள் நமக்கு தெரிந்ததே.

தற்போது நடிகர் அபிதாப் பச்சன் தனது 48 ஆவது திருமண நாளை கொண்டாடும் விதமாக தனது இன்ஸ்டாவில் இரண்டு புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். அந்தப் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றன.

இதற்கு முன்பு பிக் பி என அழைக்கப்படும் நடிகர் அபிதாப் பச்சன் அவர்கள் தனது திருமணம் எப்படி நடைபெற்றது என்பது குறித்த சில சுவாரசியமான தகவல்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொண்டு இருந்தார். அதில் நான் நடித்த “ஜன்ஜீர்“ திரைப்படம் வெற்றிப் பெற்றது. இந்த வெற்றியைக் கொண்டாடுவதற்காக நண்பர்கள் சிலருடன் சேர்ந்து லண்டன் செல்ல முடிவெடுத்தேன். அந்தப் பயணத்தின்போது உன்னுடன் யாரெல்லாம் வருகிறார்கள் என அப்பா கேட்டார். அதற்கு நான் ஜெயா பெயரை சொன்னேன்.

அதற்கு அப்பா, அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு அழைத்துச் செல் என்று ஒரே வார்த்தையாக சொல்லிவிட்டார். அந்த பேச்சுக்கு மறு பேச்சே இல்லை. உடனே எனக்கும் ஜெயாவிற்கும் திருமணம் நடைபெற்றது. திருமணம் நடந்த பிறகுதான் நான் ஜெயாவை லண்டனுக்கு அழைத்துச் சென்றேன் என மகிழச்சி பொங்க தெரிவித்து இருந்தார். இந்த நிகழ்வுகள் அனைத்தும் தற்போது சோஷியல் மிடியாவில் மீண்டும் வைரலாகி வருகிறது.

தற்போது நடிகர் அபிதாப் பச்சன் மற்றும் ஜெயா தம்பதிகளின் 48 ஆவது திருமண நாளையொட்டி அவர்களுக்கு ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து கொண்டு வருகின்றனர். அதோடு இத்தனை வருட திருமண வாழ்க்கையின் ரகசியம் என்ன என்பது போன்ற ஆச்சர்யத்தையும் சிலர் வெளிப்படுத்தி வருகின்றனர்.

LATEST News

Trending News

HOT GALLERIES