இப்படி செய்யலாமா? வருத்தத்துடன் 'குக் வித் கோமாளி' பவித்ரா பதிவு செய்த வீடியோ!

இப்படி செய்யலாமா? வருத்தத்துடன் 'குக் வித் கோமாளி' பவித்ரா பதிவு செய்த வீடியோ!

’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் சீசன் 2 தற்போது ஒளிபரப்பாகி வருகிறது என்பதும் இந்த நிகழ்ச்சிக்கு நாளுக்கு நாள் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. நான்ஸ்டாப் காமெடிகள் நிறைந்துள்ள இந்த நிகழ்ச்சி மிகக்குறுகிய காலத்தில் அனைவரையும் கவர்ந்துள்ளது

குறிப்பாக கோமாளி புகழ் மற்றும் குக் பவித்ரா இடையே இருக்கும் மெல்லிய காதல் மற்றும் ஊடல் பார்ப்பவர்களை கவரும் வண்ணம் உள்ளது. இவர்கள் இருவரும் ஒரே டீமில் இருந்தாலும் சரி, வெவ்வேறு டீமில் இருந்தாலும் சரி அடிக்கும் லூட்டிக்கு அளவே இல்லை

இந்த நிலையில் பவித்ரா தனது சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வருத்தத்துடன் பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: எனது ரசிகர்கள் அனைவருக்கும் வணக்கம். நான் பெரும்பாலும் இன்ஸ்டாகிராமில் தான் ஆக்டிவ்வாக உள்ளேன். டுவிட்டரில் நான் ஆக்டிவ்வாக இல்லை, அது ஏன் என்று எனக்கு தெரியவில்லை.

ஆனால் இதனை சாதகமாக பயன்படுத்தி சிலர் என்னுடைய பெயரில் போலியாக டுவிட்டர் பக்கங்களை உருவாக்கியுள்ளனர். இது எந்த அளவுக்கு சரி என்று எனக்கு தெரியவில்லை. அந்த போலி பக்கங்களில் உள்ள எந்த பதிவிற்கும் நான் பொறுப்பில்லை என்பதை தெரிந்து கொள்கிறேன். என்னுடைய அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்திற்கு ஆதரவு கொடுத்துக் கொண்டிருக்கும் அனைவருக்கும் எனது நன்றி என்று கூறியுள்ளார்

குக் வித் கோமாளி பவித்ராவின் பெயரில் பல போலியான டுவிட்டர் பக்கங்கள் உருவாகியிருப்பது தனது கவனத்திற்கு வந்த பின்னரே பவித்ரா இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

This is my only twitter handle pic.twitter.com/BWBKIbFTs4

— pavithralakshmi (@itspavitralaksh) January 21, 2021

LATEST News

Trending News