பிக் பாஸ் கேப்ரில்லாவிற்கு கொரோனா - ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த தகவல்

பிக் பாஸ் கேப்ரில்லாவிற்கு கொரோனா - ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த தகவல்

விஜய் டிவியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சி மூலம் அறிமுகமானவர் கேப்ரில்லா. இதன்பின் தனுஷ் நடிப்பில் வெளியான 3 படத்தில் கதாநாயகி ஸ்ருதி ஹாசனின் தங்கை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

ஆனால் இதில் கிடைக்காத பிரபலம், கமல் ஹாசன் முன் நின்று தொகுத்து வழங்கி வந்த பிக் பாஸ் சீசன் 4 இருவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை ஏற்படுத்தி தந்தது.

மேலும் பிக் பாஸ் சீசன் 4ல் இறுதி 6 போட்டியாளர்களில், 5 லட்சம் பணத்துடன் வீட்டை விட்டு வெளியேறினார் கேப்ரில்லா. தற்போது மீண்டும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.

இந்நிலையில் பிக் பாஸ் கேப்ரில்லாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் " நான் என்னை தனிமைப்படுத்திக்கொண்டேன், அனைவரும் கவனமாக வீட்டிற்குள் இறுக்கங்கள் " என தெரிவித்துள்ளார்.             

LATEST News

Trending News

HOT GALLERIES