கே.வி.ஆனந்துக்கு கொரோனா தொற்று எப்படி ஏற்பட்டது? அவர் மரணம் குறித்து வெளியான முக்கிய தகவல்
பிரபல இயக்குனர் கே.வி. ஆனந்த் திடீரென்று மாரடைப்பு ஏற்பட்ட உயிரிழந்த நிலையில், அவரது மரணம் குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகர் விவேக் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட மறுநாளே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவரைத் தொடர்ந்து இன்று கொரோனாவிற்கான சிகிச்சை பெற்று வந்த கே.வி.ஆனந்த் திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
இதனால் அவரது மரணத்திற்கும், கொரோனாவிற்கும் சம்பந்தம் இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
கே.வி.ஆனந்த் சென்னை அடையாறில் தன் அம்மா, மனைவி மற்றும் இரண்டு மகள்களோடு வசித்துவந்தார். இதில் அவரது மனைவி மற்றும் மகளுக்கு கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால், அவர்கள் வீட்டில் இருந்தபடியே சிகிச்சைப்பெற்று வந்ததனர்.
அதைத் தொடர்ந்து கே.வி.ஆனந்த், கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் போட்டுக்கொண்ட நிலையில் இரண்டாவது டோஸுக்காக காத்திருந்த நிலையில் தான் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டது.
இதற்காக, அவரும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்றிரவு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு, உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்துள்ளார். அங்கு அவரை பரிசோதித்து பார்த்ததில், மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தது தெரியவந்தது.