இதுக்கு ஒரு எண்டே இல்லையா? ஒரே வாரத்தில் 13 புதிய படங்கள் ரிலீஸ்... ஓம் படத்தின் நிலை என்ன ஆகும்?

இதுக்கு ஒரு எண்டே இல்லையா? ஒரே வாரத்தில் 13 புதிய படங்கள் ரிலீஸ்... ஓம் படத்தின் நிலை என்ன ஆகும்?

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் புதுப்படங்கள் வெளியாவது வழக்கமாக இருந்தாலும், ஒரே வாரத்தில் 13 திரைப்படங்கள் வெளியாகவிருப்பது திரையுலகில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வரும் நவம்பர் 27ஆம் தேதி வெள்ளிக்கிழமை மொத்தம் 13 தமிழ்த் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளன. இதனால் ஏற்கனவே திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படங்களுக்குப் போதிய திரையரங்குகள் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அந்த வகையில், இந்த வாரம் வெளியாகவுள்ள திரைப்படங்களாக டெலிவரி பாய், மின்னும் ஓர் இரவு, நிறம், 606, சிட்டுக்குறிஞ்சி, கோ 2 கோ, ஜெடூசி, மதுர மோசடி, மௌன மொழிகள், நெல்லை பாய்ஸ், பேய் பிடிச்சிருக்கு, வடமஞ்சு விரட்டு மற்றும் சிக்னல் அட் 11:30 ஆகிய படங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஓம் படத்திற்கு நெருக்கடி?

தனுஷ் நடிப்பில் கடந்த வாரம் வெளியான 'ஓம்' திரைப்படம் கலவையான விமர்சனங்களைச் சந்தித்துள்ளது. இதேவேளை, விஜய் ஆண்டனியின் 'அப்பா குட்டி', கீர்த்தி சுரேஷின் 'சத்தியவான் சாவித்திரி' ஆகிய திரைப்படங்களும் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறுவதில் சவால்களைச் சந்தித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்த வாரம் 13 புதிய திரைப்படங்கள் வெளியாகவிருப்பதால், ஏற்கனவே திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் படங்களின் திரையரங்க எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

குறிப்பாக, தனுஷின் 'ஓம்' திரைப்படத்திற்குக் கிடைத்துள்ள திரையரங்குகள் புதிய படங்களின் வருகையால் பாதிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

13 படங்களுக்கும் திரையரங்குகள் கிடைக்குமா?

ஒரே நாளில் இத்தனை திரைப்படங்கள் வெளியானாலும், அனைத்துப் படங்களுக்கும் போதிய திரையரங்குகள் கிடைப்பது சவாலான ஒன்றாகவே இருக்கும். மேலும், அறிவிக்கப்பட்டுள்ள சில திரைப்படங்களின் வெளியீட்டுத் திகதிகள் கடைசி நேரத்தில் மாற்றப்படவும் வாய்ப்புள்ளது.

பெரிய நட்சத்திரங்களின் திரைப்படங்கள் இல்லாத நிலையில், இந்த 13 படங்களில் எந்தப் படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கப்போகின்றன என்பதையும், ஏற்கனவே வெளியாகியுள்ள படங்களின் வசூல் மற்றும் திரையரங்கு நிலைமை எவ்வாறு மாறப்போகிறது என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

LATEST News

Trending News