கர்ணன் திரைப்படத்திற்காக நடிகர் தனுஷ் எத்தனை கோடி சம்பளம் வாங்கியுள்ளார் தெரியுமா?
நடிகர் தனுஷ் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும் மிக சிறந்த நடிகர்களில் ஒருவராகவும் உள்ளவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
அந்த வகையில் இவர் நடிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான அசுரன் திரைப்படம் மிக பெரிய வெற்றியடைந்தது மட்டுமின்றி வசூல் சாதனையும் புரிந்தது.
மேலும் சமீபத்தில் இவர் நடிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான கர்ணன் திரைப்படம் திரைப்படம் பெரியளவில் பேசப்பட்டு வருகிறது. மேலும் இதுவரை வெளியான தனுஷ் திரைப்படங்களின் வசூல் சாதனைகளை இப்படம் முறியடித்து வருகிறது
இந்நிலையில் கர்ணன் திரைப்படத்திற்காக நடிகர் தனுஷ் வாங்கியுள்ள சம்பளம் குறித்த விவரம் வெளியாகியுள்ளது.
ஆம், கர்ணன் படத்திற்காக தனுஷ் ரூ.12 கோடியை சம்பளமாக பெற்றுள்ளாராம், அவரை தொடர்ந்து மாரி செல்வராஜ் ரூ.50 லட்சம், சந்தோஷ் நாராயணன் ரூ.75 லட்சத்தை சம்பளமாக பெற்றுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.