மூன்றாவது முறையாக அஜித் படத்தை தயாரிக்கும் போனி கபூர்? தல சொன்ன அதிரடி பதில்
தல அஜித் குமார் தற்போது திரைப்படங்களில் நடிப்பது மட்டுமின்றி தனக்கு பிடித்த பல்வேறு விஷயங்களை செய்து வருகிறார்.
மேலும் கடைசியாக இவர் நடிப்பில் வெளியான விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை உள்ளிட்ட திரைப்படங்கள் மிக பெரிய வசூல் சாதனை படைத்தது.
அதனை தொடர்ந்து தல அஜித் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து வந்தார். இப்படத்தின் முதல் பார்வை மே 1 ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பர்ஸ்ட் லுக் வெளியீடு தேதி தள்ளி வைக்கப்பட்டது.
இந்நிலையில் நேர்கொண்ட பார்வை, வலிமை என இரண்டு படங்களுக்கும் சேர்த்து நடிகர் அஜித்திற்கு சம்பளம் பேசப்பட்டுள்ளது. தயாரிப்பாளர் போனி கபூர் வலிமை படம் தொடங்கும் முன்பே அஜித்திற்கு முழு சம்பளத்தையும் செட்டில் செய்துவிட்டாராம்.
இதனையடுத்து மூன்றாவது படத்தையும் தயாரிப்பதாக போனி கபூர் கேட்டுள்ள நிலையில், அதற்கு அஜித் சாரி சொல்லிவிட்டாராம்.