சந்தேகப்பட்ட ஆர்த்தி.. அவமானப்படுத்திய மாமியார்! ஜெயம் ரவி விவாகரத்து காரணம் இதுதானா
ஜெயம் ரவி ஆர்த்தி விவாகரத்து தான் தற்போது படுவைரலாக பேசப்பட்டு வருகிறது. ஜெயம் ரவிக்கும் பின்னணி பாடகி கெனிஷா என்பவருக்கும் இடையே தவறான உறவு இருக்கிறது என்று கிசுகிசுக்கப்பட்டது.
ஆனால், அது முற்றிலும் பொய் என ஜெயம் ரவி உடைத்து கூறிவிட்டார். இந்த நிலையில், ஆர்.ஜே. ஷா நடிகர் ஜெயம் ரவியை நேரில் சந்தித்து விவாகரத்து குறித்து பேசினாராம். அப்போது ஜெயம் ரவி கூறியதை தனது Youtube பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதில் தனது விவாகரத்து குறித்து தனது மனைவி மற்றும் குடும்பத்துடன் கலந்து பேசிவிட்டது தான் ஜெயம் ரவி அறிவித்தாராம். தனது மூத்த மகனுடனும் இதை பற்றி பேசியுள்ளாராம் ஜெயம் ரவி. மேலும் ஜெயம் ரவி என்று தனியாக வங்கி கணக்கு கிடையாதாம். அவருடைய மனைவி ஆர்த்தியுடன் இணை வங்கி கணக்கு தான் இருந்ததாம்.
அதுவும் ஆர்த்தியின் போன் நம்பர் தான் பதிவு செய்யப்பட்டுள்ளதாம். இதனால் ஜெயம் ரவி எங்கு எதை வாங்கினாலும், அது உடனடியாக ஆர்த்திக்கு தெரிந்து விடுகிறது. எதற்காக இந்த காசை செலவு செய்தீர்கள் என கேட்கிறாராம் ஆர்த்தி. அது ஜெயம் ரவி இடம் கேட்டால் கூட பரவாயில்லை, அவருடைய அசிஸ்டென்ட் இடம் கேட்பாராம். இது ஜெயம் ரவிக்கு மிகவும் கஷ்டத்தை கொடுத்துள்ளது.
அதே போல் ஆர்த்தியின் அம்மாவின் தயாரிப்பில் மூன்று படங்களில் ஜெயம் ரவி நடித்துள்ளார். அந்த மூன்று படமும் தயாரிப்பாளருக்கு லாபமாகவே தான் அமைந்துள்ளது. ஆனால், அந்த மூன்று படங்களும் நஷ்டம் என கணக்கு காட்டியுள்ளனர்.
இதை ஏன் செய்தீர்கள் என ஜெயம் ரவி கேட்டுள்ளார். மேலும் வீட்டில் வேலை செய்பவர்கள் முன் ஜெயம் ரவியை அவரது மாமியார் திட்டியுள்ளாராம். இது மிகப்பெரிய அவமானத்தை ஜெயம் ரவிக்கு கொடுத்துள்ளது. இங்கு தான் பிரச்சனை பெரிதாகியுள்ளது. இதன்பின் தான் ஜெயம் ரவி பிரிவு என்கிற முடிவுக்கு வந்துள்ளாராம். இந்த விஷயத்தை ஆர்.ஜே. ஷா பகிர்ந்துள்ள நிலையில், படுவைரலாகி இணையத்தில் பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.