ஹாட் பிக் வெளியிட்ட நடிகை கிரண்… கமெண்ட்ஸ்களால் அலறவிடும் நெட்டிசன்ஸ்!
கடந்த 2002 ஆம் ஆண்டு நடிகர் விக்ரம் நடித்த “ஜெமினி” படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் பாலிவுட் நடிகை கிரண். இந்தப் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் நடிகை கிரண் ஏகபோக வரவேற்பைப் பெற்றிருந்தார். இதனால் நடிகர் அஜித்துடன் “வில்லன்“, நடிகர் கமல்ஹாசனுடன் “அன்பே சிவம்“ போன்ற படங்களில் தொடர்ந்து நடித்தார்.
பிறகு நடிகர் பிரசாந்துடன் இவர் நடித்த “வின்னர்“ திரைப்படம் நடிகை கிரணுக்கு வேறலெவல் அடையாளத்தைக் கொடுத்தது. மேலும் இந்தப் படத்தில் பிகினி உடையணிந்து நடிகை கிரணும் தமிழ் ரசிகர்களுக்கு செம ஷாக் கொடுத்திருந்தார். இப்படி தமிழ் சினிமாவை ஒரு கலக்குக் கலக்கி வந்த நடிகை கிரண் “திருமலை“ திரைப்படத்திற்கு பிறகு பட வாய்ப்புகள் ஏதுமின்றி சில காலம் சினிமாவை விட்டே ஒதுங்கிவிட்டார்.
பின்னர் துணைக் கதாபாத்திரங்களில் நடிக்க துவங்கிய நடிகை கிரண் கடந்த 2015 ஆம் ஆண்டு நடிகர் விஷால் நடிப்பில் வெளியான “ஆம்பள“ திரைப்படத்தில் அத்தையாக நடித்து இருந்தார். இறுதியாக சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான “முத்தினக் கத்திரிக்காய்“ திரைப்படத்தில் மீண்டும் அத்தை வேடம். இந்நிலையில் 40 வயதாகும் நடிகை கிரண் பட வாய்ப்புக்களுக்காக தொடர்ந்து காத்திருக்கிறாராம்.
அதோடு உடல்எடை கூடிவிட்ட நடிகை கிரண் தொடர்ந்து கவர்ச்சிப் புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டு வருகிறார். இந்தப் புகைப்படங்களை பார்க்கும் நெட்டிசன்கள் வயதுக்கேற்ற மாதிரி நடந்து கொள்ளுங்கள் என்று நடிகை கிரணுக்கு அட்வைஸ் செய்து வருகின்றனர். இந்நிலையில் நடிகை கிரண் பதிவிடும் கவர்ச்சிப் புகைப்படங்கள் தொடர்ந்து சோஷியல் மீடியாவில் வைரலாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.