கலர்ஸ் தமிழின் புதிய சீரியலில் பிரபல ஜீ தமிழ் முன்னணி நடிகை, வெளியான புதிய சீரியல் ப்ரோமோ

கலர்ஸ் தமிழின் புதிய சீரியலில் பிரபல ஜீ தமிழ் முன்னணி நடிகை, வெளியான புதிய சீரியல் ப்ரோமோ

ஜீ தமிழ் தொலைக்காட்சி தற்போது ரசிகர்களின் பேராதரவை பெற்று முன்னணி தொலைக்காட்சியாக விளங்குகிறது, இதில் ஒளிபரப்பாகும் தொடர்கள் அனைத்திற்கும் ஒரு பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது.

மேலும் மற்ற தொலைக்காட்சிகளின் முன்னணி சீரியல்களுக்கு டப் கொடுக்கும் வகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சி தொடர்கள் TRP-யில் டாப்பில் உள்ளது.

அந்த வகையில் ஜீ தமிழ் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல் தான் பூவே பூச்சூடவா, இதில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பெற்றுள்ளனர் நடிகை ரேஷ்மா முரளிதரன்.

இந்நிலையில் இவர் தற்போது பிரபல கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சிக்கு மாறியுள்ளார். ஆம், கலர்ஸ் தமிழ் டிவி ஒளிபரப்பாகவுள்ள புதிய தொடரான அபி டைலர் என்ற தொடரில் கதாநாயகியாக நடிக்கவுள்ளார் நடிகை ரேஷ்மா.

இதன் ப்ரோமோ வீடியோவும் தற்போது வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. இதோ அந்த வீடியோ.

LATEST News

Trending News