அம்மாவை தள்ளிவிட்ட தங்கராஜ், அடித்த சுரேஷ்... அதிரடி காட்டிய மலர், அழகே அழகு சீரியல் புரொமோ

அம்மாவை தள்ளிவிட்ட தங்கராஜ், அடித்த சுரேஷ்... அதிரடி காட்டிய மலர், அழகே அழகு சீரியல் புரொமோ

அழகே அழகு

விஜய் டிவியில் இந்த வருடம் தொடங்கப்பட்ட தொடர்களில் ஒன்று தான் அழகே அழகு.

பிரவீன் பென்னட் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த தொடர் ஆணாதிக்க எண்ணம் கொண்டவர்களின் வாழ்க்கையில் இருக்கும் பெண்களின் போராட்ட கதையாக இந்த தொடர் பார்க்கப்படுகிறது.

இப்போது கதையில் ஸ்ருதி தனக்கு விருப்பம் இல்லாத திருமணத்திற்கு பெற்றோர்கள் ஏற்பாடு செய்திருப்பதால் அவர் திடீரென மலரின் அம்மா வீட்டிற்கு சென்றுவிடுகிறார், இதனால் பிரச்சனை வெடிக்கிறது.

மலர்-ரேவதி யாருக்கும் தெரியாமல் ஸ்ருதியை அழைத்து வந்துவிடலாம் என செல்ல அவர்களின் பின்னாலேயே சென்ற தங்கராஜ்-சுரேஷ் மலர் அம்மா வீட்டில் ஒரு ரகளையே செய்துவிட்டனர்.

 

புரொமோ

இன்றைய எபிசோடில், தங்கராஜ் கீழே தள்ளிவிட்டால் மலரின் அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் போகிறது, இதனால் மலர் அவர் அம்மாவுடனேயே இருக்கிறார். பாக்யராஜ் மலருக்கு போன் செய்து கோபத்தில் கத்துகிறாரே தவிர மலர் சொல்வதை கேட்கவில்லை.

வழக்கம் போல் தங்கராஜ் ரேவதியிடம் சண்டை போடுகிறார்.

எபிசோட் அப்படியே முடிவடைய நாளைய எபிசோடின் புரொமோ வெளியாகிறது. அதில் மவர் சுரேஷிடம், என் அம்மாவை தள்ளிவிட்டதற்காக நீயும் அவரும் என் அம்மா வீட்டிற்கு சென்று அவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்கிறார்.

LATEST News

Trending News