துளிகூட மேக்கப் இல்லை - முகத்தில் துள்ளி விளையாடும் அழகு..! - வைரலாகும் பிரியா பவானியின் குளு குளு போட்டோஸ்..!

துளிகூட மேக்கப் இல்லை - முகத்தில் துள்ளி விளையாடும் அழகு..! - வைரலாகும் பிரியா பவானியின் குளு குளு போட்டோஸ்..!

திரிஷா, நயன்தாரா, அனுஷ்கா வரிசையில் தமிழ் சினிமா நடிகைகள் பலருக்கும் நாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் திரைப்படங்களில் நடிக்கும் ஆர்வம் தோன்றியுள்ளது. 

 

ஆனாலும் அத்தி பூத்தாற் போல நாயகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் திரைப்படங்களில், ஒருசில மட்டும் ஹிட்டடிக்கின்றன. இந்நிலையில் வளர்ந்து வரும் நாயகி பிரியா பவானி சங்கர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் திரைப்படம் ஒன்றில் நடிக்க உள்ளார். 

 

2019 ஆம் ஆண்டு நயன்தாரா இரட்டை வேடங்களில் நடித்து வெளியான திரைப்படம் 'ஐரா'. ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்ற இந்த திரைப்படத்தின் இயக்குனர் சர்ஜுன் இயக்கும் புதிய படம் ஒன்றில் நடிக்க கமிட் ஆகியுள்ளார் ப்ரியா பவானி சங்கர். 

 

 

ஒரு கொலை அதை சுற்றி நடக்கும் மர்மங்கள் என உருவாகும் இந்த திரைப்படத்தில் இரகசியங்களை கண்டுபிடிக்கும் இளம் டிவி ரிப்போர்ட்டர் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் பிரியா பவானி சங்கர். 

 

மேலும் இந்த படத்தில் 'மெட்ரோ' திரைப்படத்தின் மூலம் பிரபலமான சிரிஷ் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார். ப்ரியா பவானி சங்கர் ஆய்வு செய்யும் கொலை வழக்கில் அவருக்கு உதவியாக வரும் கேரக்டரில் சிரிஷ் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

 

தற்போது ராகவா லாரன்ஸ் உடன் 'ருத்ரன்' திரைப்படத்தில் நடித்து வருகிறார் ப்ரியா பவானி ஷங்கர். இந்த படத்தை ஆடுகளம் திரைப்படத்தின் தயாரிப்பாளர் கதிரேசன் இயக்குகிறார். 

 

இதனை தொடர்ந்து, ஹரி இயக்கத்தில் அருண்விஜய் நடிக்கும் புதிய படத்திலும் நடிக்க உள்ளார். இந்த படங்களுடன் குருதி ஆட்டம், ஓ மணப்பெண்ணே, பத்து தல, பொம்மை ஆகிய படங்களையும் ப்ரியா பவானி சங்கர் கையில் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

 

இந்நிலையில், மரங்களுக்கு நடுவே... இயற்க்கை அழகை ரசித்தபடி, துளியும் மேக்அப் இல்லாமல், குறையாத சிரிப்பில் உள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.

LATEST News

Trending News

HOT GALLERIES