ரஜினியுடன் சேர்ந்த நடிகை.. சிவாஜி படத்துக்கு பிறகு நடந்திருக்கு.. ஆஹா செமயா இருக்குமே
சென்னை: கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்துக்கு ஒருவழியாக இயக்குநரை இறுதி செய்துவிட்டார்கள். ஓ மை கடவுளே, டிராகன் ஆகிய படங்களை இயக்கிய் அஷ்வத் மாரிமுத்துதான் படத்தை இயக்குகிறார். தர்மன் என்று பெயர் வைக்கப்பட்டிருக்கும் அப்படத்தில் ரஜினியுடன் சிம்ரன், ராஷி கண்ணா உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். அனிருத் இசையமைக்கிறார். இந்நிலையில் ரசிகர்களுக்கு ஒரு விஷயம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிப்பார் என்று கடந்த வருடத்தில் அறிவிப்பு வெளியானது. முதலில் சுந்தர்.சி இயக்குநராக கமிட்டானார். ஆனால் கமிட்டான சில நாட்களிலேயே அவர் படத்திலிருந்து வெளியேற; அடுத்ததாக சிபி சக்கரவர்த்தி இயக்குநராக அறிவிக்கப்பட்டார். அவரும் கதையை இறுதி செய்துவிட்டு ஷூட்டிங் தொடங்குவதற்கு தயாராக இருந்தார்கள். ஆனால் அவரும் வெளியேறிவிட்டார். இதனால் அந்தப் படம் குறித்து பெரும் குழப்பங்கள் நிலவின. ஒருகட்டத்தில் நடக்குமா நடக்காதா என்ற சந்தேகமும் பலரிடம் எழுந்தது.

அஷ்வத் மாரிமுத்து: அப்படி நடந்தால் யார்தான் படத்தை இயக்குவார் என்று எதிர்பார்த்திருந்த சூழலில்; டிராகன் பட இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து கமிட்டாகியிருக்கிறார். டிராகன் ரிலீஸான சமயத்தில் ரஜினி அவரை நேரில் வரவழைத்து பாராட்டு தெரிவித்தார். அப்போது சொன்ன ஐடியா அவருக்கு பிடித்து போக; அதை டெவலப் செய்ய சொல்லியிருக்கிறார். மொத்த கதையும் ரஜினி, கமல் ஆகிய இரண்டு பேருக்கும் பிடித்துவிட்டதால் அவரையே இயக்குநராக ஃபிக்ஸ் செய்துவிட்டார்கள்.
தர்மன்: படத்துக்கு தர்மன் என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. இதில் அவருடன் சிம்ரன், ராஷி கண்ணா நடிக்கிறார்கள். அனிருத் இசையமைக்கிறார். சமீபத்தில்தான் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டது. அப்போது பேசிய ரஜினி, "முதலில் இந்தப் படத்துக்கு கே.எஸ்.ரவிக்குமாரை இயக்குநராக ஃபிக்ஸ் செய்தோம். அதனையடுத்து சுந்தர்.சி, சிபி சக்கரவர்த்தியை இறுதி செய்தோம். அஸ்வத் மாரிமுத்து இந்தப் படத்துக்கு நான்காவது இயக்குநர்" என தெரிவித்திருந்தார்.
அஷ்வத் மாரிமுத்துவின் உறுதி: அஷ்வத் நல்ல இயக்குந்ர் என்பதால் பெரிய நம்பிக்கை இருக்கிறது. அவரும் இந்தப் படம் குறித்து பேசுகையில், "இது பக்கா கமர்ஷியல் படமாக இருக்கும். கமலுக்கு படம் செய்வதால் கண்டிப்பாக வென்றே ஆக வேண்டும் என்று ரஜினி சார் என்னிடம் சொல்லியிருந்தார். இவ்வளவு வளர்ந்த பிறகும் முதல் படம் போல் ஒரு படத்தை அவர் அணுகுவது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்தப் படம் படையப்பா, வேட்டையாடு விளையாடு ஆகிய படங்கள் கலந்த கலவையாக இருக்கும்" என உறுதிபட தெரிவித்திருந்தார்.
இணைந்த ஸ்ரேயா: படத்தின் ஷூட்டிங்கும் மும்முரமாக நடந்துவருகிறது. ரஜினிகாந்த்தை எவ்வளவு சூப்பரகா காண்பிக்க முடியுமோ அவ்வளவு காண்பிக்க வேண்டும் என முழுமுனைப்போடு உழைத்துவருகிறார் அஷ்வத். இந்நிலையில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் தரும் விதமாக ஒரு விஷயம் நடந்திருக்கிறது. அதாவது இந்தப் படத்தில் ஸ்ரேயாவும் முக்கியமான ரோலில் நடிக்கவிருக்கிறாராம்.ரஜினியுடன் தர்மன் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் அவர் பகிர்ந்திருக்கிறார். முன்னதாக சிவாஜி படத்தில் ரஜினியும், ஸ்ரேயாவும் சேர்ந்து நடித்திருந்தார்கள். அது பெரிய ஹிட்டடித்தது குறிப்பிடத்தக்கது.