18+ இணையதளத்தில் என்னுடைய புகைப்படம்... அதிர்ச்சியில் நடிகை ஜான்வி கபூர்...

18+ இணையதளத்தில் என்னுடைய புகைப்படம்... அதிர்ச்சியில் நடிகை ஜான்வி கபூர்...

ஜான்வி கபூர்

பாலிவுட் சினிமாவில் அறிமுகமாகி இன்று இந்திய அளவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ஜான்வி கபூர். இவர் நடிப்பில் அடுத்ததாக பெத்தி திரைப்படம் வெளிவரவுள்ளது. இப்படத்தில் ராம் சரணுடன் இணைந்து ஜான்வி கபூர் நடித்து வருகிறார்.

18+ இணையதளத்தில் என்னுடைய புகைப்படம்... அதிர்ச்சியில் நடிகை ஜான்வி கபூர்... | Janhvi Kapoor Talk About Deepfake Photo Of Her

நடிகைகளை தவறாக சித்தரித்து டீப்பேக் செய்த புகைப்படங்கள், வீடியோக்கள் இணையத்தில் வைரலாவது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. ராஷ்மிகா மந்தனா, நோரா பதேகி, ஆலியா பட் போன்ற நட்சத்திரங்கள் டீப்பேக் குறித்து தங்களது கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

டீப்பேக் புகைப்படம்

இந்த நிலையில், நடிகை ஜான்வி கபூர் தனது 15 வயதில், பள்ளியில் படிக்கும்போது தன்னை போன்ற தோற்றத்தில் உருவாக்கப்பட்ட டீப்பேக் புகைப்படம் 18+ இணையதளத்தில் பார்த்ததாக கூறியுள்ளார்.

இதுகுறித்து பேட்டி ஒன்றில் பேசிய ஜான்வி கபூர், "நான் ஒரு 18+ இணையதளத்தில் என்னுடைய புகைப்படத்தை பார்த்தேன். பள்ளியில் ஐடி வகுப்பின்போது இந்த சம்பவம் நடந்தது. சில மாணவர்கள் அந்த வகுப்பில் அந்த மாதிரியான இணையத்தளங்களை பார்த்துக்கொண்டிருந்தார்கள். அப்போது என் புகைப்படங்கள் அங்கே இருந்தன. அது உண்மையா அல்லது டீப்பேக்கா என்று அப்போது எனக்கு தெரியவில்லை" என கூறினார்.

 

18+ இணையதளத்தில் என்னுடைய புகைப்படம்... அதிர்ச்சியில் நடிகை ஜான்வி கபூர்... | Janhvi Kapoor Talk About Deepfake Photo Of Her

மேலும் பேசிய அவர், சில நேரங்களில் அதிகாரப்பூர்வ செய்தி பக்கங்களில் கூட அவர் அணியாத ஆடைகள் அல்லது செய்யாத போஸ்களில் உருவாக்கப்பட்ட படங்கள் பகிரப்படுவதாகவும், இதனால் மனம் அமைதியற்ற நிலையில் இருப்பதாகவும் ஜான்வி கபூர் கூறியுள்ளார். 

LATEST News

Trending News

HOT GALLERIES