அஜித் - ஷாலினியை வைத்து திரைப்படம்.. விஷ்ணு எடவன் டைரக்ஷனில் ஹாய்.. அவர் என்ன சொல்றாரு தெரியுமா?
சென்னை: தமிழ் சினிமாவின் ஃபேவரைட் ஜோடிகளில் அஜித் - ஷாலினி முக்கியமானவர்கள். கடந்த 2000ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட அவர்கள்; கடந்த 26 வருடங்களாக சர்ச்சைகள் எதுவுமின்றி ஜாலியாக வாழ்ந்துவருகிறார்கள். நடிகை ஷாலினியும் இப்போது பொது நிக்ழ்ச்சிகளில் அதிகம் கலந்துகொள்ள தொடங்கியிருக்கிறார். இந்நிலையில் இயக்குநர் விஷ்ணு எடவன் பேசியிருக்கும் விஷயம் சோஷியல் மீடியாவில் வைரலாகியிருக்கிறது.
விஜய்க்கு ஜோடியாக காதலுக்கு மரியாதை, கண்ணுக்குள் நிலவு ஆகிய இரண்டு படங்களில் நடித்த ஷாலினி; அஜித்துடன் அமர்க்களம் படத்தில் நடித்தார். சரண் இயக்கியிருந்த அந்தப் படம் இரண்டு பேருக்குள்ளும் உண்மையான காதலை நிகழ்த்திவிட்டது. உடனடியாக ஷாலினியின் வீட்டில் சென்று அஜித் பேச; வீட்டு சம்மதம் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து கடந்த 2000ஆம் ஆண்டு அவர்களுக்கு சென்னையில் வைத்து பிரமாண்டமாக திருமணம் நடந்தது. அவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் இருக்கிறார்கள்.

க்யூட் ஜோடி: திருமணம் ஆனதிலிருந்து க்யூட் ஜோடியாக ஏகேவும், ஷாலினியும் வலம் வருகிறார்கள். நடிப்பை ஷாலினி நிறுத்திவிட்டாலும்; அஜித்துக்கு தேவையான அத்தனை விஷயங்களையும் செய்து கொடுக்கிறார். திருமணம் செய்துகொண்ட பிறகு மிகவும் பக்குவம் வந்துவிட்டது என ஒரு பேட்டியில் ஏகே சொல்லியிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்போது கார் ரேஸுக்கு செல்வதற்கு முன்பு ஷாலினிக்கு காதல் முத்தத்தை கொடுத்துவிட்டு போவதுதான் அஜித்தின் வாடிக்கை.
அஜித்தின் பழக்கம்: அதேபோல் அஜித்தும் ஷாலினிக்கு ஃபுல் சப்போர்ட்டை கொடுத்துவருகிறார். இத்தனை வருடங்கள் கேமராவிலிருந்து ஒதுங்கியிருந்த ஷாலினி; சில மாதங்களுக்கு முன்பு நடந்த ஒரு யூடியூப் சேனல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டது ஆச்சரியத்தை கொடுத்தது. அதை பார்த்த பலரும் ஷாலினி மீண்டும் நடிக்க வந்தால் சூப்பராக இருக்குமே என தங்களது ஆசையை வெளிப்படுத்துகிறார்கள். ஆனால் அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை என்பதுதான் நிதர்சனம்.
ட்ரெண்டான வீடியோ: சில நாட்களுக்கு முன்புகூட ஒரு வீடியோ ட்ரெண்டானது. அதில் அஜித் தனது மகன் விளையாடும் கால்பந்து க்ளப்புக்காக பிரியாணி செய்துகொண்டிருந்தார். அப்போது அங்கே வந்த ஷாலினி, 'நான் சொன்ன மாதிரி செஞ்சாச்சா?' என ஜாலியாக கேட்க; அஜித் சிரித்துவிட்டார். அதேபோல் ஷாலினி செல்ஃபி எடுக்கும்போது, 'அஜித் இங்கே பாரு' என அழைத்ததும்; அதற்கு ஏகே கொடுத்த ரியாக்ஷனும் அவ்வளவு க்யூட்டாக இருந்தன. ரசிகர்கள் அவ்வளவு ரசித்தார்கள். இப்படி ரசிகர்கள் கொண்டாடும் அஜித் - ஷாலினி குறித்து ஹாய் படத்தின் இயக்குநர் விஷ்ணு எடவன் பேசியிருக்கும் விஷயம் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
விஷ்ணு எடவன் பேட்டி: அவர் அளித்த பேட்டியில், "எல்லா ஆண்களும் ஷாலினி மாதிரி ஒரு பெண்ணை விரும்பலாம். ஆனால் அவளை பெற நாம் அஜித்குமார் மாதிரி இருக்க வேண்டும். இதுதான் ஹாய் படத்தின் ஒன் லைன். இந்தக் கதை நன்றாக வேலை பார்க்கும் ஒருவர் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்கிறார். அவர் ஒரு பெண்ணை விரும்புகிறார். அந்தப் பெண்ணுக்கு அவர் தகுதியானவராக மாறுவதற்கு அவர் எப்படியெல்லாம் முயற்சி செய்கிறார் என்பதைத்தான் படத்தில் கூறியிருக்கிறோம்" என்றார்.