21 வயதான நடிகை அனிகா சுரேந்திரனின் பொங்கல் ஸ்பெஷல் போட்டோஷூட்..
கேரளாவில் பிறந்து கதா துடருன்னு என்ற மலையாள படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து சினிமா பயணத்தை தொடங்கிய குழந்தை தான் அனிகா சுரேந்திரன்.
12 ஆண்டுகளாக தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் நடித்து வரும் அனிகாவிற்கு தற்போது 20 வயதாகிறது. என்னை அறிந்தால், விஸ்வாசம் போன்ற படங்களில் அஜித்திற்கு மகளாக நடித்து வந்தார்.

அதன்பின் 17 வயதானபோது கதாநாயகியாக புட்ட பொம்மா, ஓ மை டார்லிங் படத்தில் நடித்து பிரபலமானார். சிறுவயதில் இருந்தே போட்டோஷூட்டில் கவனம் செலுத்தி வரும் அனிகா, நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்ற படத்தில் தனுஷ் இயக்கத்தில் கதாநாயகியாக நடித்தார்.
கடந்த ஆண்டு நவம்பரோடு தன்னுடைய 21வது பிறந்தநாளை கொண்டாடினார் அனிகா. இதனையடுத்து ஒருசில படங்களில் கமிட்டாகி வருகிறார்.
தற்போது பொங்கல் பண்டிகை முன்னிட்டு எடுத்த சேலை புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.


