அவரு சூப்பர் ஸ்டார்ப்பா!! தலைவரையே தட்டை கரண்டியால் தட்டவைத்த பேரன்கள்..
தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகையை தமிழ்நாட்டு மக்கள் உட்பட உலகில் இருக்கும் அனைத்து தமிழ் மக்களும் கொண்டாடி வருகிறார்கள்.
பொங்கலன்று புதுத்துணி உடுத்தி, வீட்டில் பொங்கல் வைத்து வழிபடுவார்கள். அந்தவகையில் திரைப்பிரபலங்களும் பொங்கல் திருநாளை தங்கள் குடும்பத்தினரும் கொண்டாடி வருகிறார்கள்.

நேற்றைய தைப்பொங்கல் அன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள், வீட்டிற்கு வெளியில் நின்ற தன்னுடைய ரசிகர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
இதனையடுத்து, தன்னுடைய மனைவி, மகள்கள், பேரன்களுடன் பொங்கல் வைத்து கொண்டாடியுள்ள வீடியோவை செளந்தர்யா இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோவில், பேரன்களுடன் கையில் தட்டை வைத்துக்கொண்டு கரண்டியால் தட்டி கொண்டாட்டியிருக்கிறார் சூப்பர் ஸ்டார். இந்த வீடியோவை பார்த்த பலரும், அவரு சூப்பர் ஸ்டார்ப்பா என்று கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.