இப்படியொரு கியூட்டான மூடநம்பிக்கை இருக்கா? நடிகர் ரவிமோகன் ஓபன் டாக்!
நடிகர் ரவி மோகன் பள்ளி காலத்தில் இருந்து இன்று வரையில் பின்பற்றி வரும் கியூட்டான மூட நம்பிக்கை குறித்து சமீபத்திய பேட்டியொன்றில் குறிப்பிட்ட விடயம் இணையத்தில் வெளியாகி படு வைரலாகியுள்ளது.
தமிழ் சினிமா முன்னணி நடிகர்களின் பட்டியலில் ஒருவராக வலம் வருபவர் தான் நடிகர் ரவி மோகன். கடந்த ஆண்டு இறுதியில் திடீரென பெயரை மாற்றினார், இவர் நடிப்பில் வெளியான அனைத்து படங்களும் தனித்துவமான பாணியில் இருப்பதால் இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது.

இவரது நடிப்பில் கடைசியாக காதலிக்க நேரமில்லை திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றுவருகின்றது.
விவாகரத்து சர்சை நடிகர் ரவி மோகனின் குடும்ப பிரச்சனை தான் அண்மை காலமாக இணையத்தில் பயங்கர வைரலாக பேசப்பட்டது.

ரவி மோகன் ஆர்த்தி என்பவரைக் காதலித்து திருமணம் செய்த நிலையில், இந்த தம்பதிகளுக்கு ஆரவ் மற்றும் அயான் என இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த வருடம் இவர்கள் பிரிவதாக அறிவிப்பை வெளியிட்டிருந்தனர். ரசிகர்களை இந்த அறிவிப்பு பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது அதனை தொடர்ந்து பாடகி கெனிஷாவுடன் நெருக்கம் காட்டி வருகின்றார்.

தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் இன்று (10) வெளியாகியுள்ள பராசக்தி திரைப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். இந்த திரைப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு காணப்படுகின்றது.
இந்நிலையில், நடிகர் ரவி மோகன் பள்ளி காலத்தில் இருந்து இன்று வரையில் பின்பற்றி வரும் கியூட்டான மூட நம்பிக்கை குறித்து சமீபத்திய பேட்டியொன்றில் குறிப்பிட்ட விடயம் இணையத்தில் வெளியாகி படு வைரலாகியுள்ளது.

அதில் அவர் குறிப்பிடுகையில், பள்ளி நண்பன் ஒருவர் ஞாயிற்றுக்கிழமைகளில் சிவப்பு ஆடை அணியவேண்டும் என்று சொன்னதை இன்று வரையில் தான் பின்பற்றி வருவாதான குறிப்பிட்டுள்ளார்.
அதற்கு தொகுப்பாளினி ஞாயிற்றுக்கிழமைகளில் படப்பிடிப்பு இருந்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்க.. நான் புத்திசாலி, உள்ளாடையை சிவப்பு நிறத்தில் போடுவேன் என குறிப்பிட்டுள்ளார்.