சத்தமே இல்லாமல் திருமணத்தை நடத்திய தொகுப்பாளினி டிடி! குவியும் வாழ்த்துக்கள்
பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினி டிடி-யின் தம்பி தர்ஷன் கிர்கிஸ்தானை சேர்ந்த அஜார் என்பவரை திருமணம் செய்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தொகுப்பாளினியாக 20 வருடங்களுக்கும் மேலாக கலக்கி வருபவர் தான் டிடி என்கிற திவ்யதர்ஷினி.

காபி வித் டிடி, ஜோடி நம்பர் ஒன், சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகள் மூலம் பல ரசிகர்களுக்கு பரீட்சையா மாணவர்தான் அதுமட்டுமல்லாமல் சோசியல் மீடியாக்கிலும் செம ஆக்டிவாக இருந்து வருகிறார்.
அவரது இயல்பான பேச்சு, நகைச்சுவை கலந்த உரையாடல், செலிப்ரிட்டிகளை சௌகரியமாக பேச வைக்கும் திறன் ஆகியவை அவரை முன்னணி தொகுப்பாளினியாகவே இன்றுவரையில் நிலைத்திருக்க செய்துள்ளது.

40 வயதிலும் குறையாத அழகுடன் ரசிகர்களை கவர்ந்துவரும் தொகுப்பாளினி டிடி தற்போது தனது இன்ஸ்டாகிராம் பதிவில், "எங்கள் தம்பி இன்று காலை ஒரு நெருக்கமான திருமண விழாவில் திருமணம் செய்து கொண்டார்.
தர்ஷனுக்கும் அஜாருக்கும் உங்கள் ஆசிகளைப் பொழியுங்கள். உங்களுக்காக மிகவும் மகிழ்ச்சி எங்கள் அழகான அஜாரே. உங்களை வரவேற்பதிலும், கிர்கிஸ்தானிலிருந்து உங்கள் அழகான குடும்பத்தை எங்களுடைய குடும்பத்தில் அரவணைப்பதிலும் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்." என்று குறிப்பிட்டு வெளியிட்டுள்ள அவரது தம்பியின் திருமண புகைப்படங்கள் இணைத்தில் வைரலாகியுள்ளதுடன் வாழ்த்துக்களையும் குவித்து வருகின்றது.