நடிகை சமந்தாவின் சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?
நடிகை சமந்தா இயக்குனர் ராஜ் நிடிமோருவை திருமணம் செய்து வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில் அவரது சொத்து மதிப்பு குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவைக் காதலித்து, திருமணம் செய்தார். பின்பு சில வருடங்களில் இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2017ம் ஆண்டு அவரைப் பிரிந்தார்.
சமந்தாவை விவாகரத்து செய்த நாக சைதன்யாக நடிகை சோபிதா துலிபாலாவை இரண்டாவது திருமணம் செய்து வாழ்ந்து வருகின்றார்.

சமந்தா விவாகரத்து பின்பு அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை மேற்கொண்டதுடன், தற்போது அதிலிருந்து மீண்டு வந்ததுடன், படங்களிலும் பிஸியாக நடித்து வருகின்றார்.
நடிகை சமந்தா பேமிலி மேன் என்ற வெப்சீரிஸில் நடிக்கும் போது இதன் இயக்குனரான ராஜ் நிடிமோருவைக் காதலித்து வந்த நிலைியில் இவர்களின் திருமணம் சில மாதங்களுக்கு முன்பு மிகவும் எளிமையாக நடைபெற்றது.

2025ம் ஆண்டு நிலவரப்படி சமந்தாவின் சொத்து மதிப்பு சுமார் ரூ.100-120 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
சமந்தா ஒரு படத்திற்கு ரூ.3 முதல் 8 கோடி வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகின்றது. ஐட்டம் பாடல்களுக்கு மட்டும் ரூ.5 கோடி வரை சம்பளம் வசூலிப்பதாக தெரியவந்துள்ளது.
அதே போன்று விளம்பர ஒப்பந்தங்கள் மூலமாக சமந்தா ஆண்டுக்கு சுமார் ரூ.8 கோடி சம்பாதிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஹைதராபாத்தில் சமந்தாவிற்கு ரூ.7.8 கோடி மதிப்பிலான நவீன டூப்ளக்ஸ் அடுக்குமாடி குடியிருப்பினை வைத்துள்ளார்.
மும்பையில் 15 கோடி மதிப்பிலான கடல் முகப்புடன் 3 படுக்கையறை கொண்ட அபார்ட்மெண்டை வாங்கியுள்ளாராம்.
மேலும் இவரது ரியல் எஸ்டேட் முதலீடுகள் ரூ.9.34 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளின் பட்டியலில் சமந்தா முக்கிய இடத்தில் இருக்கின்றார்.