15 வருட காதல்..10 நிமிடத்தில் முடிந்த கணவரின் உயிர்!! சரிகமப பவித்ரா உருக்கம்..

15 வருட காதல்..10 நிமிடத்தில் முடிந்த கணவரின் உயிர்!! சரிகமப பவித்ரா உருக்கம்..

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்த நிகழ்ச்சி தான் சரிகமப. சமீபத்தில் சரிகமப சீனியர் சீசன் 5 நிறைவு பெற்ற நிலையில் தற்போது சரிகமப லிட்டில் சாம்ப்ஸ் சீசன் 5 தொடங்கியுள்ளது. ஏற்கனவே முடிந்த சரிகமப சீசன் 5 நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர் பவித்ராவின் வாழ்க்கையில் நடந்த சோகமான சம்பவம், ரசிகர்களை மிகவும் பாதித்தது.

15 வருட காதல்..10 நிமிடத்தில் முடிந்த கணவரின் உயிர்!! சரிகமப பவித்ரா உருக்கம்.. | Saregamapa Senior 5 Contestant Pavithras Emotional

பவித்ராவின் கணவர் காலமான செய்தி பலரிடையே அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்தி அவர் மீது அக்கறையை தோன்ற வைத்தது. காதல் திருமணம் செய்து கொண்ட பவித்ரா, தனது கணவரின் ஊக்கமும் ஆதரவும் காரணமாக பாடகியாக மாறியதாக தெரிவித்தார்.

நீ பாடகியாக வரவேண்டும் என்பதே கணவரின் ஆசை என்று பவித்ரா பலமுறை கூறியிருக்கிறார் இதை மனதில் வைத்து அவரின் கனவை தற்போது நனவாக்கியிருக்கிறார் பவித்ரா.

இறுதி சுற்று போட்டிக்கு தேர்வாக 5வது இடத்தை பெற்றார். ஃபைனல் சுற்றுக்கு முன் பவித்ரா தன்னுடைய கணவரின் கல்லறைக்கு சென்று அஞ்சலி செலுத்தி அவருக்காக பாடிய தருணங்கள் மிகவும் உணர்ச்சிபூர்வமானதாக அமைந்தது.

15 வருட காதல்..10 நிமிடத்தில் முடிந்த கணவரின் உயிர்!! சரிகமப பவித்ரா உருக்கம்.. | Saregamapa Senior 5 Contestant Pavithras Emotional

அந்த மேடையே தன் கணவருக்காக அர்பணிப்பாக இருந்ததாக அவர் தெரிவித்தபோது நடுவர்கள் மற்றும் பார்வையாளர்கள் கண்ணீர் மல்க உருகினர். நிகழ்ச்சிக்கு பின் தன் கணவரின் மறைவு குறித்து பேட்டியொன்றில் பகிர்ந்துள்ளார்.

அதில், எத்தனை வருட வாழ்க்கை ஒரே இரண்டு நிமிடத்தில் முடிந்துவிட்டது போல் இருந்தது. அவர் இல்லையென்று நினைக்கவே முடியவில்லை, அந்த நாளில் நாங்கள் இருவரும் ஒன்றாகவே பயணம் செய்தோம்.

ஒரு ஆபீஸ் போன் வந்ததால்தான் அவர் என்னை விட்டுபிரிந்தார். அவரை எழுப்பியதே என் தவறோ என்று இன்றும் என் மனதை உறுத்துகிறது என்று கண்ணீருடன் பகிர்ந்துள்ளார். மேலும் மருத்துவமனையில் நடந்த சம்பவங்களையும் திடீரென முடிந்துவிட்டது என்று டாக்டர் கூறிய தருணத்தையும் நினைவு கூர்ந்து அவர் இல்லை என்பதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை என்று கூறி பலரையும் உருக வைத்திருக்கிறார் சரிகமப பவித்ரா.

LATEST News

Trending News