கோலிவுட் நடிகைகளிடம் கிழிந்த முகத்திரை.. பாலிவுட் நடிகைகளுக்கு ஸ்கெட்ச் போடும் நடிகர்?.. தீவிரமா இருக்காராம்

கோலிவுட் நடிகைகளிடம் கிழிந்த முகத்திரை.. பாலிவுட் நடிகைகளுக்கு ஸ்கெட்ச் போடும் நடிகர்?.. தீவிரமா இருக்காராம்

கோலிவுட்டில் நடிப்பு பயணத்தை ஆரம்பித்து இப்போது பாலிவுட்வரை பறந்து சென்றிருப்பவர் அந்த நடிகர். தனது அசாத்திய திறமையால்தான் இதையெல்லாம் சாத்தியமாக்கியிருக்கிறார். திறமையாளர் என்ற பெயரை பெற்றாலும் அவர் சரியான பெண் பித்தர் என்ற பிம்பமும் அவரை சுற்றி எழுந்துகொண்டே இருக்கிறது. இந்நிலையில் நடிகர் பற்றி புதிய கிசுகிசு ஒன்று கிளம்பியிருக்கிறது.

தமிழ் திரைத்துறையில் அந்த நடிகர் தனது பயணத்தை ஆரம்பித்தபோது இவரெல்லாம் நடிகரா என்றுதான் அனைவருமே கிண்டல் செய்தார். ஒன்றிரண்டு படங்களிலேயே ஆள் காணாமல் போய்விடுவார் என்று உறுதியாக சொன்னார்கள். ஆனால் அதையெல்லாம் தனது காதுகளில் வாங்கிக்கொண்டாலும் தலையில் ஏற்றிக்கொள்ளாத அவர் தன்னுடைய திறமையை வளர்ப்பதிலேயே குறியாக இருந்தார்.

திறமையை வளர்த்து அதை சரியாக வெளிப்படுத்தியதன் காரணமாக வெற்றி மேல் வெற்றி அவரை வந்து சேர்ந்தது. இதனால் தமிழின் டாப் 10 நடிகர்கள் லிஸ்ட்டில் சேர்ந்துவிட்டார் அவர். அதுமட்டுமின்றி விருதுகளையும் வாங்கி குவித்தார். ஒன்றிரண்டு படங்களில் காணாமல் போய்விடுவார் என்று வாய் பேசியவர்கள் எல்லாம் அதை பார்த்து ஆச்சரியத்தில் வாயடைத்து போயிருக்கிறார்கள்.

தமிழில் மட்டும் தனது அசுரத்தனமான நடிப்பை வெளிப்படுத்திவந்த அவருக்கு பாலிவுட்டிலும் வாய்ப்புகள் கிடைத்தன. அங்கு சென்றபோதும் ஒருதரப்பினர் வழக்கம்போல் நெகட்டிவிட்டியை பரப்பினார்கள். அதையும் அசால்ட்டாக ஹேண்டில் செய்த அவர் பாலிவுட்டிலும் தனது கொடியை உயர பறக்க வைத்திருக்கிறார். இப்போது அங்கும் டாப் ஸ்டார்களில் ஒருவராக மாறிவிட்டார்.

இப்படி நடிகரை சுற்றி ஏகப்பட்ட பாசிட்டிவ் விஷயங்கள் இருந்தாலும் அவர் சரியான பெண் பித்தர் என்ற பிம்பம் தொடர்ந்து எழுந்துகொண்டே இருக்கிறது. அதற்கேற்றபடிதான் அவரது செயல்களும் இருக்கின்றன. முக்கியமாக கோலிவுட்டில் அவரிடமிருந்து அழைப்பு வந்தாலே சில நடிகைகள் பயப்படுவதாகத்தான் இன்டஸ்ட்ரியில் பேச்சுக்கள் ஓடுகின்றன. திருமண முறிவையும் சந்தித்த நடிகர் இப்போது சிங்கிளாகத்தான் இருக்கிறார். தன்னுடைய சில தேவைகளை பூர்த்தி செய்துகொள்வதற்காக சில நடிகைகளை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தாராம். ஆனால் நடிகரின் ஒரிஜினல் முகத்தை தெரிந்துகொண்டதால் டிமிக்கி கொடுக்க ஆரம்பித்துவிட்டார்களாம் அம்மணிகள்.

இதை எதிர்பார்க்காத நடிகர் ஆரம்பத்தில் என்ன செய்வதென்று திணறினாராம். பிறகுதான் ஒரு யோசனை வந்ததாம். அதாவது இங்கிருப்பவர்களுக்குத்தானே தன்னை பற்றி தெரிந்துவிட்டதால் தனது ரூட்டை மாற்றி பாலிவுட்டில் தன்னுடன் நடிகைகளிடம் நல்ல பெயரை வாங்க ஆரம்பித்துவிட்டாராம். இவரது திறமையை பார்த்து அவர்கள் பிரமித்து பேச வருவதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு அவர்களை தன்னுடைய வலையில் வீழ்த்த ஆரம்பித்திருக்கிறாராம். அந்த லிஸ்ட் மெல்ல மெல்ல நீண்டுகொண்டே செல்கிறதாம்.

LATEST News

Trending News