பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
இந்திய அளவில் பிரம்மாண்டமாக பல்வேறு மொழிகளில் நடத்தப்பட்டு வரும் நிகழ்ச்சி பிக் பாஸ்.
தமிழ், இந்தி, கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் நடந்து வரும் இந்த நிகழ்ச்சியை முன்னணி ஹீரோக்கள் தொகுத்து வழங்கி வருகிறார்கள்.
இந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் நடிகர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, சல்மான் கான் - ரூ. 250 கோடி, விஜய் சேதுபதி - ரூ. 75 கோடி, நாகார்ஜுனா - ரூ. 30 கோடி, கிச்சா சுதீப் - ரூ. 20 கோடி மற்றும் மோகன்லால் - ரூ. 18 கோடி என சம்பளம் வாங்கி வருவதாக கூறப்படுகிறது.
மேலும், இதற்கு முன் தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கமல் ஹாசன் ரூ. 150 கோடி சம்பளம் பெற்றதாகவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.