தண்ணில கண்டம்..குறும்படம் போட்டுக்காட்டிய பிக்பாஸ்!! கம்ருதீனை வெளுத்த அவுஸ்மேட்ஸ்..
ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த பிக் பாஸ் 9 இந்த வாரம் துவங்கிவிட்டது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க 20 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளனர்.
முதல் நாளில் இருந்து போட்டியும் கடுமையாகியுள்ளது. இன்று 4வது நாளில் பிக்பாஸ் வீட்டிற்கு வழங்கப்படும் தண்ணீரை பிடிக்க போட்டியாளர்கள் தவரவிடுகிறார்கள்.
இதனால் வீட்டிற்கு 50 லிட்டர் கம்மியாக இருக்கிறது. இதற்கு காரணம் என்ன என்று பிக்பாஸ் ஒரு குறும்படம் காட்ட, தண்ணீர் பிடிக்கும் பொறுப்பை ஏற்றுள்ள கம்ருதீன் தூங்கியுள்ளார்.
இதனை பார்த்த அவுஸ்மேட் கம்ருதீன் செய்த தவறை கண்டித்து அவரை திட்டுகிறார்கள். இதன்பின் என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்ப்பார்ப்பை பிக்பாஸ் குறும்படத்தின் மூலம் ஏற்றிவிட்டாரே என்று நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள்.