அன்று தண்ணீர் கேன் விற்றவர்..இப்போ பாக்ஸ் ஆபிஸ் மன்னன்!! இவர் தான்..
சாதாரண மக்கள் உட்பட சினிமா நட்சத்திரங்களுக்கு வெற்றி என்பது நினைத்த நேரத்தில் சாத்தியமாவது கிடையாது. கடின உழைப்பு, பொறுமை, தன்னம்பிக்கை இருந்தால் மட்டுமே அது அனைவருக்கும் சாத்தியமாகும்.
அப்படி அன்று தண்ணீர் கேன் விற்றும் ஓட்டுநராக பணியாற்றியும், ஆஃபீஸ் பாய் வேலை பார்த்தும் இருந்தவர் தான் இன்று இந்தியாவையே திரும்பி பர்க வைக்கும் இயக்குநரக திகழ்ந்து வருகிறார். அவர் தான் காந்தாரா படத்தின் இயக்குநரும் நடிகருமான ரிஷப் ஷெட்டி.
கர்நாடகாவை சேர்ந்த ரிஷப் ஷெட்டி, பி.காம் படித்து முடித்து என்ன எச்ய்வது என்று தெரியாமல், சினிமா கனவுகளுடன் கிடைக்கும் வேலைகளை செய்து வந்தார். தண்ணீர் கேன் விற்பது, கடுமான உதவியாளராக வேலை செய்வது. ரியல் எஸ்டேட், ஹோட்டல்களில் வேலை பார்ப்பது, ஓட்டுநராக என்று பல வேலைகளை செய்து வந்தார்.
சினிமா கனவுகளுக்கு உயிர்கொடுக்கும் விதமாக திரைப்பட இயக்கத்தில் டிப்ளமோ படித்த கையுடன், சினிமாவுக்குள் நிழைந்து தனது போராட்டத்தை தொடர்ந்தார். மும்பை சென்று தயாரிப்பு நிறுவனத்தில் ஆஃபீஸ் பாய் வேலை பார்க்க தொடங்கி தயாரிப்பாளர்களுக்கு ஓட்டுநராகவும் பணியாற்றினார்.
க்ளாப் பாயாக இருந்து சினிமாவை கற்றுக்கொண்டார் ரிஷப் ஷெட்டி. பின் கர்நாடகாவுக்கு திரும்பும் போது 2010ல் கன்னட சினிமாவில் இளம் இயக்குநர்கள், நடிகர்கள் அறிமுகமாகினர்.
அந்த காலத்தில் தான் கன்னடத்தில் 2012ல் வெளியான துக்ளக் படத்தில் வில்லனாக நடித்தும் 2013ல் அர்ஜுன் நடித்த அட்டஹாசா, லூசியா போன்ற படங்களில் சிறு சிறு ரோலில் நடித்தார். பின் 2016ல் ரிக்கி என்ற கன்னட படத்தில் இயக்குநராக அறிமுகமாகி கிரிக் பார்ட்டி என்ற படத்தையும் இயக்கி மிகப்பெரிய வசூலை ஈட்டினார்.
2018-ல் இவர் இயக்கிய 'சர்காரி ஹை. பிரா. ஷாலே, காசர்கோடு, கொடுகே: ராமண்ணா ராய்' படத்திற்கு சிறந்த குழந்தைகளுக்கான திரைப்பட பிரிவில் தேசிய விருதும் வழங்கப்பட்டது.
இதன்மூலம் ரிஷப் ஷெட்டி கன்னட திரையுலகில் டாப் இயக்குநரானார். 2022ல் 16 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான காந்தாரா படத்தினை இயக்கி நடித்து ரூ. 400 கோடிக்கும் மேல் வசூலித்தார்.
இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் உள்பட பல மொழிகளில் இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதோடு 2 தேசிய விருதும் கிடைத்தது. கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த காந்தாரா சாப்டர் 1 ரிலீஸாகி 6 நாட்களாகி ரூ. 415 கோடி வரை பாக்ஸ் ஆபிஸ் பெற்று சாதனை படைத்து வருகிறது.
தண்ணீர் கேன் போட்டவர் தற்போது கன்னட திரையுலகின் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்ற பெருமையையும் பெற்று வருகிறார் நடிகர் ரிஷப் ஷெட்டி.