தவெக கூட்டத்தில் விஷவாயு..? குறுகிய நேரத்தில் 40 உயிர்கள் பலியான காரணம்..? வெளியான பகீர் தகவல்..
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பிரச்சாரக் கூட்டத்தில் 40 பேர் உயிரிழந்த சம்பவம் மாநில அரசியல் வட்டாரங்களை ஆட்டிமுட்டடிக்கின்றது. ஆளும் கட்சி மற்றும் காவல்துறை வட்டாரங்கள் இதற்கு நடிகர் விஜய் முழு காரணம் எனக் கூறி வருகின்றன.
ஆனால், தவெகவினர் அவசர பிரேதப் பரிசோதனை, குறிப்பிட்ட இடத்தில் மட்டும் ஏற்பட்ட மரணங்கள், விஷவாயு கசிவு சதி உள்ளிட்ட கேள்விகளை அடுக்கடுக்காக எழுப்பி, சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்தச் சம்பவம் இணையப் பக்கங்கள் மற்றும் பொதுமக்கள் வட்டாரங்களில் பரவலான சந்தேகங்களைத் தூண்டியுள்ளது.கரூர் அருகே நடந்த தவெக பிரச்சாரக் கூட்டத்தில், இரண்டு கிலோமீட்டருக்கு மேல் நீண்ட கூட்டணியில் பங்கேற்றவர்கள் மத்தியில், மாலை 6 மணிக்குப் பிறகு ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்தவர்கள் மட்டுமே திடீரென மூச்சுத் திணறி மயங்கி விழுந்தனர்.
இளைஞர்கள், குழந்தைகள் உட்பட பலர் இதில் பாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. கூட்டத்தில் பங்கேற்ற தவெக தொண்டர்கள், "ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே இந்த மரணங்கள் நடந்தன. அங்கு திட்டமிட்டு விஷவாயு கசிவு ஏற்படுத்தப்பட்டதா என சந்தேகம் எழுகிறது," என்று கூறுகின்றனர்.
இது தவெக மீது புனையப்பட்ட அரசியல் சதி எனும் கருத்து வலுப்பெறுகிறது. சட்ட ரீதியாக, மாலை 6 மணிக்குப் பிறகு பிரேதப் பரிசோதனை நடத்துவதற்கு நீதிமன்ற அனுமதி தேவை என்பது தெளிவு. இருப்பினும், விடிவதற்குள் அவசரமாகப் பரிசோதனை நடத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டது ஏன்?
மேலும், அவசரமாக தனிநபர் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த அவசரம், "உண்மையை மறைக்கும் முயற்சி" என தவெகவினர் விமர்சிக்கின்றனர். "இறந்தவர்களின் உடல்கள் அடக்கம் செய்யப்படுவதற்கு முன்பே நீதிமன்றத்தின் அனுமதி இன்றி பரிசோதனை செய்வது சந்தேகத்தை அதிகரிக்கிறது," என அவர்கள் கூறுகின்றனர்.
இணையப் பக்கங்களில் பரவும் விவாதங்கள், ஆளும் கட்சியின் குற்றச்சாட்டுகளை மறுத்து, தவெகவைச் சுற்றி "மோசமான சதி" நடக்கிறது என்பதை பொதுவாக கூறுகின்றன.
தவெகவினர், "இந்த விவகாரத்தில் உண்மையைக் கண்டறிய முயற்சி செய்வோம். சரியான பாதையில் இந்த விவகாரத்தை முன்னெடுப்போம்," என பேசி வருகின்றனர்.
தமிழக அரசு இதுவரை அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடவில்லை. விசாரணைக் குழுவின் முதல் அறிக்கை எப்போது வெளியாகும் என்பது குறித்து தெளிவான தகவல் இல்லை.
சிபிஐ விசாரணை கோரும் குரல்கள் வலுப்பெறுகின்றன. அதே சமயம், தவெக நீதி மன்றத்தில் CBI விசாரணை கோரி மனு அளித்துள்ளது. இது நாளை (29-9-2025) மதியம் 02:30-க்கு விசாரணைக்கு வரும் என தெரிகிறது.
இதில், தமிழக அரசு என்ன வாதத்தை முன்வைக்க போகின்றது. தவெக என்ன சொல்லப்போகிறது..? போன்ற எதிர்பார்ப்புகள் பரபரப்பை கிளப்பியுள்ளன. தவெக மற்றும் திமுக என இரண்டு கட்சிகளின் எதிர்கால அரசியல் நகர்வுகளையும் இது பாதிக்கலாம் என அரசியல் அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இந்தப் பிரச்சினை தமிழக அரசியலில் புதியத் திருப்பத்தை ஏற்படுத்துமா..? என்பதை நிகழ்வுகள் தீர்மானிக்கும்.