சிறையில் போடப்பட்டுள்ள குக் வித் கோமாளி நபர்.. யார் தெரியுமா? ஷாக்கிங் நியூஸ்
குக் வித் கோமாளி மக்கள் மனம் கவர்ந்த நிகழ்ச்சியாகும். இதன் 6வது சீசன் நேற்றுடன் முடிவு வந்துள்ளது. குக் வித் கோமாளி சீசன் 6ன் டைட்டில் வின்னராக ராஜு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவருக்கு ரூ. 5 லட்சம் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
டைட்டில் வென்ற ராஜு, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பகிர்ந்துகொண்ட தகவல், அனைவருக்கும் ஷாக் கொடுத்துள்ளது. குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு வந்த ஒருவர், தற்போது சிறையில் இருப்பதாக ராஜு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ராஜு பேசுகையில், "நான் ஒரு ஃபாரினரை உருவ கேலி செய்துவிட்டேன் என நிறைய பேர் என்னை திட்டினார்கள். அதனால் அவரை சந்தித்து மன்னிப்பு கேட்க வேண்டும் என நினைத்தேன். அவரை பார்க்கவே முடியவில்லை.
ஏனென்றால், அந்த வீடியோ வைரல் ஆனதும், அவரை சிறையில் போட்டு இருக்காங்க. காரணம், அவர் ஒர்க் பர்மிட் இல்லாமல் வேலை பார்த்துட்டு இருந்திருக்கிறார்" என ராஜு கூறியுள்ளார். இந்த தகவல் தற்போது இணையத்தில் படுவைரலாகி வருகிறது.