இதை தூக்கிட்டு வந்தா செருப்பை கழட்டி அடிப்பேன்.. மாதம்பட்டியாரின் ரகசியத்தை உடைத்த ஜாய் கிரிஸில்டா..
பிரபல சமையல் கலைஞரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா இடையேயான திருமணம் மற்றும் அதைச் சுற்றிய சர்ச்சைகள் தமிழகத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், ஜாய் கிரிஸில்டா தனது திருமண வாழ்க்கை மற்றும் மாதம்பட்டி ரங்கராஜுடனான கடைசி இரவு பற்றி உருக்கமாகப் பேசியுள்ளார். இந்தப் பேட்டி இணையவாசிகளை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஜாய் கிரிஸில்டா தனது பேட்டியில், 2023 டிசம்பரில் மாதம்பட்டி ரங்கராஜைத் திருமணம் செய்ததாகவும், இந்தத் திருமணம் குறித்து ரங்கராஜின் பெற்றோருக்கும், அவரது தம்பி கிருஷ்ணகுமாருக்கும் தெரியும் என்றும் கூறினார். "ரங்கராஜின் பெற்றோர் எங்களை ஆசீர்வதித்தனர்.
நான் பலமுறை அவர்களது வீட்டிற்கு சென்றிருக்கிறேன். அவர் தனது முதல் மனைவியை ஆறு ஆண்டுகளுக்கு மேலாக பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், விரைவில் விவாகரத்து பெறப்போவதாகவும் என்னிடம் கூறினார்," என்று ஜாய் தெரிவித்தார்.
மேலும், ரங்கராஜ் தனக்கு துணையாகவும், அன்பாக உணவு பரிமாற ஒருவர் தேவை என்றும் கூறி தன்னை காதலிக்கத் தொடங்கியதாகவும், திருமணத்திற்கு பிறகே உடலுறவுக்கு சம்மதித்ததாகவும் ஜாய் கூறினார்.
2024இல் முதல் முறையாக கர்ப்பமானபோது கரு நிலைக்கவில்லை என்றும், இதனால் ரங்கராஜ் மிகவும் வருத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். தற்போது மீண்டும் கர்ப்பமாக இருப்பதாகவும், இந்தக் குழந்தையை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று ரங்கராஜ் விரும்பியதாகவும் ஜாய் தெரிவித்தார்.
"எனக்கு மகள் இல்லை, ஒரு பெண் குழந்தை வேண்டும் என்று அவர்தான் கூறினார்," என்று அவர் கூறினார்.
ஜாயின் கூற்றுப்படி, மூன்று மாத கர்ப்பத்தின்போது ரங்கராஜ் தன்னை மிரட்டி கருவை கலைக்க முயன்றார். ஆனால், மருத்துவர் கருக்கலைப்பு உயிருக்கு ஆபத்து என்று கூறியதால் அது நிறுத்தப்பட்டது.
"நான் உயிருக்கு ஆபத்து இருந்தாலும் கருவை கலைக்கத் தயார் என்று கூறினேன். ஆனால், பணத்திற்காக நாடகமாடுவதாக சிலர் கூறுவது வேதனையளிக்கிறது. நான் கண்ணியமாக வாழ்ந்தவள், பணத்திற்காக இப்படி செய்வேனா?" என்று ஜாய் கேள்வி எழுப்பினார்.
ஜாய் தனது பேட்டியில் மாதம்பட்டி ரங்கராஜுடனான கடைசி இரவு பற்றி உருக்கமாகப் பேசினார். "எப்போதும் அவர் ஷூட்டிங்கில் இருந்து தாமதமாக வந்தாலும், நான் எழுந்து கதவைத் திறந்து வரவேற்பேன். அவர் மீது நான் வைத்திருந்த காதல் அப்படி.
ஆனால், ஒருநாள் ஷூட்டிங் என்று கூறி கிளம்பிய அவர் திரும்பவே இல்லை. காலையில் எழுந்து பார்த்தபோது வீடு வெறிச்சோடி இருந்தது. அவரது ஓட்டுநரிடம் விசாரித்தபோது, மேனேஜர் அழைத்துச் சென்றதாகக் கூறினார்.
அதன்பிறகு அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை, எனது எண்ணை பிளாக் செய்துவிட்டார்," என்று ஜாய் கண்ணீருடன் கூறினார்.
ஜாய் மேலும் கூறுகையில், "நான் விபச்சாரியோ, லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருப்பவளோ இல்லை. முறைப்படி திருமணம் செய்தவள். நாங்கள் வாடகைக்கு எடுத்த வீட்டு ஒப்பந்தத்தில் கூட ‘மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் மனைவி ஜாய் கிரிஸில்டா’ என்றே பதிவாகியுள்ளது.
ஆனால், அவர் என்னை தவிக்கவிட்டு, எந்த விளக்கமும் இல்லாமல் சென்றுவிட்டார்," என்று வேதனை தெரிவித்தார். மாதம்பட்டி ரங்கராஜின் சொத்து மற்றும் செல்வாக்கு குறித்த வதந்திகளை மறுத்த ஜாய், அவருக்கு கடன்கள் இருப்பதாகவும் உண்மையை வெளிப்படுத்தினார்.
மேலும், நான் பணத்திற்காக இப்படி செய்கிறேன் என்று என்னை குற்றம் சாட்டுகிறார்கள். சமீபத்தில், மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பில் இருந்து ஒருவர் என்னை தொடர்பு கொண்டு இவ்வளவு ரூபாய் பணம் கொடுத்து உங்களுக்கு செட்டில்மெண்ட் பேச வருகிறார்களாம் என்று கூறினார்கள். அப்போது, நான் பணத்தை தூக்கிட்டு என்னை பாக்க வந்தா செருப்பை கழட்டி அடிப்பேன் என பேசினேன் என கூறியுள்ளார் ஜாய் கிரிஸில்டா. என்னுடைய குழந்தைக்கு அப்பா வேண்டும், இனிஷியல் வேண்டும் என போராடுவதாகவும் கூறுகிறார்.
ஜாய் கிரிஸில்டாவின் இந்த பேட்டி இணையத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் இதுகுறித்து பலவிதமான கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
சிலர் ஜாய்க்கு ஆதரவு தெரிவிக்க, மற்றவர்கள் மாதம்பட்டி ரங்கராஜின் மௌனத்தை விமர்சித்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பில் இருந்து இதுவரை எந்தவித பதிலும் வரவில்லை, இது மேலும் சர்ச்சையை தூண்டியுள்ளது.
மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஜாய் கிரிஸில்டா இடையேயான இந்த சர்ச்சை, திருமணம், கர்ப்பம், மற்றும் பிரிவு குறித்து பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
ஜாயின் உருக்கமான பேட்டி, அவரது வலியையும், மன உளைச்சலையும் வெளிப்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் அடுத்து என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.