டாப் குக்கு டூப் குக்கு 2 நிகழ்ச்சியில் முதல் எலிமினேஷன் யார் தெரியுமா?
ரியாலிட்டி ஷோக்களுக்கு பெயர் போன விஜய் டிவியில் புத்தம்புதிய கான்செப்டில் ஒளிபரப்பாகி வந்த ஷோ குக் வித் கோமாளி.
இந்நிகழ்ச்சி 5 சீசன்களை தாண்டி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த ஷோவை போல சன் டிவியில் டாப் குக்கு டூப் குக்கு என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாக தொடங்கியது.
முதல் சீசன் முடிந்ததை தொடர்ந்து 2வது சீசன் சமீபத்தில் தான் தொடங்கப்பட்டது.
இதில் போட்டியாளர்களாக ரோபோ ஷங்கர், பெசன்ட் ரவி, டெல்னா டேவிஸ், நடிகை கிரண், பிக்பாஸ் ஷிவானி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
2வது சீசன் தொடங்கப்பட்டு 4 வாரங்கள் ஆன நிலையில் முதல் எலிமினேஷன் நடந்துள்ளது, ரோபோ ஷங்கர் எலிமினேட் ஆகியுள்ளார்.