ஹீரோவா ஜெயிச்சாரா KPY பாலா!.. காந்தி கண்ணாடி முதல் நாள் வசூல் எவ்வளவு?..
கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடம் அதிகம் பிரபலமானவர் பாலா. டைமிங் காமெடி மூலம் எல்லோரும் சிரிக்க வைப்பவர் இவர். கலக்கப்போவது நிகழ்ச்சி மட்டும் இல்லாமல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இசை நிகழ்ச்சி உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளிலும் பாலாவின் பங்களிப்பு இருக்கும். உள்ளே வந்து சிறிது நேரம் காமெடி செய்து ரசிகர்களை சிரிக்க வைத்து விடுவார்.
இது மட்டும் இல்லாமல் தமிழகமெங்கும் பல ஊர்களுக்கும் சென்று கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இப்படி சம்பாதிக்கும் பணத்தில் பெரும் அளவு மற்றவர்களுக்கு உதவுவதிலேயே செலவு செய்கிறார் பாலா.
என்னுடைய செலவுக்கு மாதம் 25 ரூபாய் இருந்தால் போதும். மற்றவற்றை கஷ்டப்படும் மக்களுக்கு கொடுத்து விடுகிறேன் என்கிறார் பாலா. ஆம்புலன்ஸ் வாங்கி கொடுப்பது, ஆட்டோ வாங்கி கொடுப்பது, மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனங்கள் வாங்கிக் கொடுப்பது, மருத்துவ செலவுக்கு பணமில்லாமல் கஷ்டப்படுபவர்களுக்கு பணமாக கொடுப்பது என பல வகைகளிலும் பலருக்கும் உதவி வருகிறார் பாலா.
பல திரைப்படங்களிலும் சின்ன சின்ன வருடங்களில் நடித்திருக்கிறார். தற்போது காந்தி கண்ணாடி திரைப்படம் மூலம் கதையின் நாயகனாக மாறியிருக்கிறார். இந்த படத்தில் இயக்குனர் பாலாஜி சக்திவேல் ஒரு முக்கிய இடத்தில் நடித்திருக்கிறார். நேற்று வெளியான இப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருக்கிறது. முதல் பாதியில் சிரிக்க வைத்தாலும் படத்தின் கடைசி அரை மணி நேரம் தங்களை அழ வைத்து விட்டதாக பிரபலங்கள் மட்டும் இல்லாமல் ரசிகர்களும் சொல்லி வருகிறார்கள்.
நடிப்பிலும் தன்னால் முடிந்தவரை ஸ்கோர் செய்திருக்கிறார் பாலா. கண்டிப்பாக அவருக்கு அடுத்த பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. நேற்று வெளியான காந்தி கண்ணாடி திரைப்படம் முதல் நாளில் 17 லட்சம் வரை வசூல் செய்திருக்கிறது. இந்த படத்திற்காக பாலா சம்பளம் எதுவும் வாங்கவில்லை. ஒரு சிறிய தொகையை மட்டுமே அட்வான்ஸாக வாங்கிக் கொண்டு நடித்திருக்கிறார். படத்தில் லாபம் வந்தால் தயாரிப்பாளர் தனது தன்னுடைய சம்பளத்தை கொடுப்பார் என நம்பிக் கொண்டிருக்கிறார் பாலா.