பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வரும் பிரபல சீரியல் நடிகை.. யார் தெரியுமா
பிக் பாஸ் 9 வருகிற அக்டோபர் 5ம் தேதி முதல் தமிழில் துவங்கவுள்ளது. இதற்கான அறிவிப்பு ப்ரோமோ சமீபத்தில் வெளிவந்தது.
கடந்த 8வது சீசனை தொகுத்து வழங்கிய நடிகர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளார். பிக் பாஸ் 9ல் கலந்துகொள்ளப்போகும் போட்டியாளர்கள் குறித்து தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இதில் ஷபானா, வினோத் பாபு, நடிகை பரிணா, உமைர், நேஹா உள்ளிட்ட பலரின் பெயர் இதில் அடிபடுகிறது. ஆனால், உறுதியாக யார் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளப்போகிறார் என்பது குறித்து தெரியவில்லை.
இந்த நிலையில், விஜய் டிவியில் ஒளிபரப்பான தமிழும் சரஸ்வதியும் சீரியலில் கதாநாயகியாக நடித்த நடிகை நக்ஷத்ரா பிக் பாஸ் 9ல் போட்டியாளராக வரப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.