லட்சுமிமேனனை கெடுத்ததே தமிழ் நடிகர்கள் தான்.. ஒரே போடாக போட்ட பிரபலம்

லட்சுமிமேனனை கெடுத்ததே தமிழ் நடிகர்கள் தான்.. ஒரே போடாக போட்ட பிரபலம்

தமிழ் சினிமாவில் கவனிக்கத்தக்க நடிகையாக வலம் வந்தவர் நடிகை லட்சுமி மேனன். கேரளாவை பூர்விகமாக கொண்ட இவர் தமிழில் ”கும்கி” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். முதல் படத்திலேயே கிராமத்து பெண்ணாக நடித்து மக்களின் மனம் கவர்ந்தார்.

அதன் பிறகு இவர் நடித்த சுந்தரபாண்டியன், குட்டி புலி, பாண்டியநாடு, மஞ்சப்பை போன்ற படங்கள் இவருக்கு தமிழ் சினிமாவில் தனி அடையாளத்தை பெற்றுக் கொடுத்தது. நீண்ட இடைவெளிக்கு பிறகு இவர் சந்திரமுகி 2 படத்தில் நடித்தார். அதன் பிறகு தன்னுடைய மேல்படிப்பிற்காக சினிமா விட்டு விலகுவதாக அறிவித்தார்.

தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக வலம் வருவார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கையில் திடீரென்று இப்படி அறிவித்தது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது. இந்நிலையில் சமீபத்தில் லட்சுமி மேனன் தலைமறைவாக இருப்பதாக செய்திகள் வந்தது. அதனை ஆராய்ந்த போது தான் தெரிந்தது கேரளாவில் அன்று இரவு நடிகை லட்சுமிமேனன் அவரது நண்பர்களுடன் மதுபான விடுதிக்கு சென்று இருக்கிறார்.

அங்கு ஐடி ஊழியர் குரூப்பிற்கும் லட்சுமிமேனன் நண்பர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த மோதல் தொடர்ந்து லட்சுமி மேனன் அந்த ஐடி ஊழியரை காரில் கடத்தி சென்று துன்புறுத்தியதாக ஐடி ஊழியர் எர்ணாகுளம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இந்நிலையில் லட்சுமிமேனன் இந்த மாதிரி சூழ்நிலையில் மாட்டிக் கொண்டதற்கு தமிழ் நடிகர்கள் ஒரு காரணம் என்று வலைப்பேச்சு அந்தணன் கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில் , ”கேரளா சினி இண்டஸ்ட்ரியல் இந்த மாதிரி சம்பவங்கள் நடப்பது ஒன்றும் புதிதல்ல, ஆனால் காலப்போக்கில் அது காணாமல் போய்விடும். இதே மாதிரி தான் சில நாட்களுக்கு முன்பு ஹேமா கமிட்டி என்று ஒன்று ஆரம்பித்து கேரளா சினி இண்டஸ்ட்ரியல் உள்ள நடிகர்கள் மீது பாலியல் புகார்கள் எழுந்தது”.

“ மிகவும் பரபரப்பாக எழுந்த அந்த சம்பவம் கடைசியில் என்ன ஆயிற்று என்று என்றவரை தெரியவில்லை விசாரித்துப் பார்த்தால் அந்த கமிட்டியவே கலைச்சிட்டு போய்ட்டாங்க. அதேபோல தான் லட்சுமி மேனன் வழக்கு என்ன ஆகும் என்று சொல்ல முடியாது. லட்சுமி மேனன் நல்ல நடிகை தான். தமிழ் நடிகர்கள் தொடர்ந்து அவருக்கு வாய்ப்பு கொடுத்திருந்தார்கள் என்றால் ஒருவேளை இங்கேயே அவர் நிரந்தரமாக இருந்திருக்கலாம் இன்னும் பத்து வருஷம் நடித்துக் கொண்டிருந்திருக்கலாம். ஆனால் அது எல்லாம் லட்சுமிமேனனுக்கு கொடுத்து வைக்காமல் போய்விட்டது”. என்று கூறியுள்ளார்

LATEST News

Trending News