ரோகிணிக்கு தம்பியான சீதா புருஷன்… அருணின் வில்லத்தனம் ஓவரா போதே!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள்.
அருணின் பித்தலாட்டத்தை சீதா மற்றும் மீனாவிடம் விவரமாக மாட்டி விடுகிறார் முத்து. சீதா கோபமாக அருணை திட்டுகிறார். மீனா அன்னைக்கே நான் சொன்னேன். என் தங்கச்சிக்கு உங்களை பிடிச்சதால தான் நான் கல்யாணம் செஞ்சி வச்சேன்.
இதனால என் புருஷனோட மரியாதைக்கு பிரச்னை வந்தா நான் சும்மா இருக்க மாட்டேனு சொன்னேன்ல எனக் கேட்கிறார். இதில் கடுப்பாகும் அருண் வண்டியை எடுத்துக்கொண்டு செல்கிறார். சீதா தன்னுடைய தப்புக்காக மீனா, முத்துவிடம் கையெடுத்து கும்பிட்டு மன்னிப்பு கேட்கிறார்.
ஆனால் அதை பெரிதாக யோசிக்காமல் முத்து அவரை கலாய்த்து சமாதானம் செய்கிறார். நீ இது குறித்து போய் அருணிடம் எதுவும் கேட்க கூடாது. நீங்க சமாதானமா இருங்க எனக் கூறி அவரை வீட்டிற்கு அனுப்புகின்றனர். ஸ்கூலில் இருக்கும் கிரிஷ் அமைதியாக உட்கார்ந்து இருக்கிறார்.
அப்போ அங்கு வரும் பையன் ஒருவன் கிரிஷிடம் எங்க அம்மா எனக்கு ஐஸ்கிரீம் வாங்கிட்டு வந்தாங்களே. அடுத்த மாதம் நான் ஊருக்கு போவேன். உன்னை அழைச்சிட்டு போகத்தான் யாருமே வர மாட்டாங்க. நீ பொய் சொல்ற, லையர் எனப் பேசும் கடுப்பாகும் கிரிஷ் அந்த பையனை தள்ளி பென்சிலால் குத்தி விடுகிறார்.
வீட்டிற்கு வரும் சீதா அமைதியாக இருக்க அருணின் அம்மா பிரச்னையா எனக் கேட்க இல்லை என ரூமுக்கு சென்று விடுகிறார். பின்னால் வரும் அருண் சீதா காலில் சாஸ்டாங்கமாக விழுந்து, உன் மேல அவங்க பாசம் வச்சிருக்கது எனக்கு பிடிக்கலை.
அதற்காக தான் அப்படி சொன்னேன். வேற எந்த பிரச்னையும் இல்லை என சீதாவை சமாளிக்க யோசிக்காமல் சீதாவும் சமாதானம் ஆகி இனிமே இப்படி செய்யாதீங்க என அருணை கட்டிக்கொள்கிறார். மனதில் அருண் முத்துவை இந்த முறை ஜெயிச்சிட்ட. கண்டிப்பா உன்னை இந்த குடும்பத்தில் இருந்து பிரிப்பேன் எனப் பேசிக்கொள்கிறார்.
மறுபக்கம் ஸ்கூலில் இருக்கும் கிரிஷை முட்டி போட வைத்து எதற்கு இப்படி செஞ்ச எனக் கேட்க எனக்கு அம்மா இல்லைனு சொன்னான். அதற்காக தான் இப்படி செஞ்சேன் என்கிறார். இனிமே இப்படி செய்வீயா எனக் கேட்க அவன் என்னிடம் பேசினால் அப்படிதான் செய்வேன் என்கிறார்.
இதனால் ஸ்கூல் அதிகாரி, உன் மேல போலீஸ் கம்ப்ளையண்ட் தந்தாச்சு. அவங்க வந்து உன்னை கூட்டிக்கிட்டு போவாங்க என மிரட்டுகிறார். அப்போ மீனா வெளியில் வந்து நிற்க ஸ்கூல் அதிகாரி வெளியில் வந்து மீனாவிடம் ஒரு பூ ஆர்டரை கொடுக்கிறார். மீனாவும் சம்மதம் சொல்லிவிட்டு செல்கிறார்.
மீண்டும் உள்ளே வரும் அதிகாரி, போலீஸ் சாயந்தரம் வருவாங்க. நீ இப்போ போ எனக் கூறி செல்கிறார். பின்னர் முத்து தன்னுடைய காரில் வரும் வயதான கஸ்டமரிடம் பேசிக்கொண்டு வருகிறார். இந்தமுறை அருண் ரோகிணி போலவே மாட்டிக்காமல் தப்பித்து கொண்டதை பார்க்கும் போது ரசிகர்களுக்கு கடுப்பை ஏற்படுத்தும் என்றே கூறப்படுகிறது.