அட்டகாசமாக வந்தது பிக்பாஸ் 9 சீசனின் புதிய அப்டேட்.... லோகோ வெளியீடா?
குபு சிகு குபு சிகு பிக்பாஸ் என தமிழ் சின்னத்திரை ரசிகர்களை ரசித்து பார்க்க வைத்த ஒரு நிகழ்ச்சி.
தமிழில் ஆரம்பிக்கப்பட்டபோது நிகழ்ச்சிக்க கடும் பிரச்சனைகள் வந்தன, ஆனால் அடுத்தடுத்த சீசன்கள் எந்த ஒரு பிரச்சனையும், சர்ச்சையும் இல்லாமல் ஒளிபரப்பானது.
கடைசியாக 8வது சீசன் ஒளிபரப்பானது, இந்த சீசனில் முத்துக்குமரன் வெற்றியாளராக தேர்வானார். கடந்த சில மாதங்களாக பிக்பாஸ் 9வது சீசன் குறித்து நிறைய செய்திகள் உலா வந்தன.
இந்த நிலையில் பிக்பாஸ் 9வது சீசனின் லோகோ இன்று மாலை 6 மணிக்கு வெளியாக இருப்பதாக ஒரு குட்டி வீடியோவுடன் விஜய் டிவி அறிவித்துள்ளனர்.