"நான் கல்யாணம் பண்ணா இந்த நடிகையுடன் தான்.." பப்லு பிரித்திவிராஜ் ஒபன் டாக்..!

"நான் கல்யாணம் பண்ணா இந்த நடிகையுடன் தான்.." பப்லு பிரித்திவிராஜ் ஒபன் டாக்..!

90-களில் இருந்து சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் தனது நடிப்புத் திறமையால் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் பப்லு பிரித்திவிராஜ்.

கடந்த ஆண்டு வெளியான ‘அனிமல்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பெரும் பாராட்டு பெற்றவர்.

இந்நிலையில், தொகுப்பாளர் அசாரின் யூடியூப் சேனலுக்கு அளித்த சமீபத்திய பேட்டியில், பப்லு பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

பேட்டியில், ஒரு கற்பனையாக, தொலைக்காட்சி நடிகை ஒருவரை திருமணம் செய்ய வேண்டும் என்றால் யாரை தேர்வு செய்வீர்கள் என்ற கேள்விக்கு, பப்லு தனது தேர்வாக ‘கண்ணான கண்ணே’ சீரியலில் நடித்த நடிகை நித்யா தாஸை குறிப்பிட்டார்.

"நித்யா தாஸ் ரொம்ப போல்டான நடிகை. என்னைப் போலவே அவர் எப்போதும் சோகமாக இருக்க மாட்டார். ஷூட்டிங்கிற்கு எப்போதும் உற்சாகமாக வருவார். ஆனால், ஏற்கனவே அவருக்கு திருமணமாகி, குழந்தையுடன் சந்தோஷமாக இருக்கிறார்," என்று பப்லு கூறினார்.

நடிகர் பப்லுவின் இந்த பேட்டி ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது நகைச்சுவையான பதிலும், நித்யா தாஸ் மீதான பாராட்டும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்ந்து தனது நடிப்பு மற்றும் ஆளுமையால் ரசிகர்களை கவர்ந்து வரும் பப்லு, இந்த பேட்டியின் மூலம் மீண்டும் கவனம் ஈர்த்துள்ளார்.

LATEST News

Trending News