படமும் இல்ல, சீரியலும் இல்ல.. வயித்து பிழைப்புக்காக ரூட்டை மாற்றிய.. கும்தா நடிகை!
முன்பெல்லாம் சினிமாவில் நடிக்க வேண்டுமென்றால் கையில் ஒரு போட்டோவை வைத்துக் கொண்டு, பல்வேறு தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஏறி இறங்கிய கதையை நாம் கேள்விப்பட்டு இருக்கிறோம். ஆனால், இன்றைய காலத்தில் நிலைமையே வேராக உள்ளது. சோசியல் மீடியாவில் அரைகுறை ஆடை உடன் ஏதோ ஒரு போட்டோவை பதிவிட்டு பிரபலமாகி விட்டால், அவரகளுக்கு சினிமா வாய்ப்பும், சீரியல் வாய்ப்பும் வீடு தேடி வந்துவிடுகிறது. இதில் நடிகர்களை விட நடிகைகளுக்கு தான் மவுசு அதிகம் அவர்களுக்குத்தான் வாய்ப்பு தேடி வருகிறது.
சோசியல் மீடியாவில் நடிப்பு என்றால் என்னவென்று தெரியாத பலரும் தற்போது சீரியல் மற்றும் படங்களில் நடித்து வருகின்றனர். ஆனால், சரியான திறமை இருந்தால் மட்டுமே சினிமாவில் ஜெயிக்கக்கூடிய, இந்த காலத்தில், வெறும் உடல் அழகை காட்டி பட வாய்ப்பை பெற்ற பலர் தற்போது இருந்த இடம் தெரியாமல் போய்விட்டனர். அப்படி சோசியல் மீடியாவில் கவர்ச்சி போட்டோவை வெளியிட்டு வந்த கும்தா நடிகைக்கு பட வாய்ப்பு இல்லாததால், வருமானத்திற்காக தனது ரூட்டையே மாற்றி இருக்கிறார்.
நடிகையாக வேண்டும் என்று ஆசையுடன் வாய்ப்பை தேடி வந்த அந்த நடிகைக்கு, வாய்ப்புகள் எதுவும் சரியாக அமையாததால் சோசியல் மீடியா பக்கம் சென்றார். அங்கு விதவிதமான கவர்ச்சி தூக்கலான போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு பாலோவர்களின் எண்ணிக்கையை கணிசமாக அதிகரித்தார். இதன் மூலம் அவருக்கு சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட அந்த கும்தா நடிகைக்கு சில சீரியல்களிலும், சில படங்களிலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்த வாய்ப்பை அந்த கும்தா நடிகை சரியாக பயன்படுத்திக் கொள்ள தெரியவில்லை என்று தான் சொல்ல வேண்டும். சோசியல் மீடியாவில் கவர்ச்சி புயலாக சுற்றி வந்த அந்த நடிகைக்கு நடிப்பு என்பது சுட்டு போட்டால் கூட வராது என்பதை, அவர் நடித்த படத்தைப் பார்த்தாலே நாம் தெரிந்து கொள்ளலாம்.
இதைத்தொடர்ந்து, தனியார் தொலைக்காட்சி ஒன்று நடத்திய ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியிலும் அவரால் பிரகாசிக்க முடியாமல் போகவே, நிகழ்ச்சிக்கு போன வேகத்திலேயே திரும்பி வந்தார். பட வாய்ப்பும் இல்லை, சீரியலும் இல்லாததால், வயிற்றுப் பிழைப்புக்காக வேறு வழியே இல்லாமல் மீண்டும் சோசியல் மீடியாவில் அதிரடியான கவர்ச்சி வீடியோ மற்றும் போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அதுமட்டுமில்லாமல், தனது வருமானத்தை மேலும் அதிகரிக்க தனி திட்டத்தை போட்ட அந்த கும்தா நடிகை, இன்ஸ்டாகிராமில் தன்னை பிரத்யேகமாக சப்ஸ்கிரைப் செய்வதற்கு தனி கட்டணத்தை வைத்து இருக்கிறார். அப்படி சப்ஸ்கிரைப் செய்பவர்களுக்கு என்றே தனியாக போட்டோ, ரீல்ஸ் போன்றவற்றை வெளியிட்டு வருகிறார் அந்த கும்தா நடிகை. ஏற்கனவே பல நடிகைகள் வருமானத்திற்கு என்ன செய்வது என்று தெரியாமல் சுற்றிக்கொண்டு இருக்கும் நிலையில், கும்தா நடிகை, வருமானத்தை அதிகரிக்க புது வழியை காட்டியிருக்கிறார். இதன் மூலம் இன்னும் எத்தனை நடிகைகள், இந்த வேலையில் இறங்கப் போகிறார்கள் என்பது தெரியவில்லை.