டிவி நடிகையுடன் நடிகர் தனுஷ் திருமணம்? சற்று முன் வெளியான பரபரப்பு தகவல்கள்!

டிவி நடிகையுடன் நடிகர் தனுஷ் திருமணம்? சற்று முன் வெளியான பரபரப்பு தகவல்கள்!

கோலிவுட் நடிகர் தனுஷ் மற்றும் பாலிவுட் நடிகை மிருணாள் தாகூர் திருமணம் செய்யவிருப்பதாக வதந்திகள் பரவி வருகின்றன.

இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி, ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இந்த தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை.

தனுஷ், ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவை 2004இல் திருமணம் செய்து, 2022இல் பிரிந்தார். 2024இல் இருவரும் முறையாக விவாகரத்து பெற்றனர். இந்நிலையில், மிருணாள் தாகூருடன் தனுஷ் அடிக்கடி பொது நிகழ்ச்சிகளில் தோன்றியது டேட்டிங் வதந்திகளை தூண்டியது.

‘சன் ஆஃப் சர்தார் 2’ பட பிரீமியரில் தனுஷ் மிருணாளுடன் கைகோர்த்து பேசிய வீடியோவும், தனுஷின் சகோதரிகளை மிருணாள் இன்ஸ்டாகிராமில் பின்தொடர்வதும் இந்த வதந்திகளுக்கு வலு சேர்த்துள்ளது.

ஆதாரங்களின்படி, இருவரும் காதலிப்பதாகவும், ஆனால் உறவை பகிரங்கப்படுத்த விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது.இருப்பினும், திருமணம் குறித்து எந்த உறுதியான தகவலும் இல்லை.

மிருணாள், ஹிந்தி தொலைக்காட்சி சீரியலில் நடித்து டிவி நடிகையாக ஆரியப்பட்டவர். படிப்படியாக சினிமாவிலும் அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இதற்கு முக்கிய காரணம், இவருடைய பியர் வடிவ உடல் வாகு தான் என்று கூறுகிறார்கள்.‘சீதா ராமம்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு தென்னிந்திய திரையுலகில் பிரபலமானவர்.

தற்போது, தனுஷின் ‘தேரே இஷ்க் மெய்ன்’ படத்தின் முடிவு விழாவில் மிருணாள் கலந்து கொண்டதும் கவனத்தை ஈர்த்தது. இருவரும் இந்த வதந்திகளுக்கு மௌனமாகவே இருக்கின்றனர். ரசிகர்கள் ஆவலுடன் உறுதியான அறிவிப்பை எதிர்பார்க்கின்றனர்.

LATEST News

Trending News