விக்னேஷ்-னு பேர் வெச்சிருந்தா எல்லாருக்கு நயன்தாரா அமையுமா!! கலாய்த்த இயக்குநர் பார்த்திபன்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பல என்டர்டைன்மென்ட் ஷோக்களை ஒளிப்பரப்பு செய்து மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வருகிறது. அந்தவகையில் விஜய் டிவியில் இருந்து ஜீ தமிழ் டிவிக்கு வந்த தொகுப்பாளினி மணிமேகலை தொகுத்து வழங்கும் Single பசங்க என்ற நிகழ்ச்சியை துவங்கியுள்ளது.
ஏற்கனவே டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய மணிமேகலை தற்போது சிங்கிள் பசங்க என்ற புதிய என்டர்டைன்மென்ட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளார்.
இந்நிகழ்ச்சியில், நடுவராக இயக்குநர் பார்த்திபன், நடிகை ஆல்யா மானசா மற்றும் நடிகையும் பிக்பாஸ் இந்தி பிரபலமுமான ஸ்ருத்திகா அர்ஜுன் நடுவர்களாக கலமிறங்கியுள்ளனர். சின்னத்திரை நடிகைகளுடன், 10 சிங்கிள் பசங்க மிங்கிள்-ஆக போட்டிப்போடும் நிகழ்ச்சி தான் Single பசங்க.
மேலும் விக்னேஷ்-னு பேர் வெச்சிருந்தா நயன்தாரா அமையுமா என்று நனைச்சிட்டு இருக்கக்கூடாது என்று விக்னேஷ் என்ற சிங்கிள்-ஐ கலாய்த்துள்ளார் இயக்குநர் பார்த்திபன். இதன் பிரமோ வீடியோ தற்போது வெளியாகி மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வருகிறது.