1000 கோடி வசூலை அள்ள ஜனநாயகன் கிளைமாக்ஸில் இப்படி ஒரு காட்சியா..? தியேட்டர் தெறிக்க போகுது!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய்யின் கடைசி படமாக உருவாகி வரும் ஜனநாயகன், இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில், கேவிஎன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு, கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ், பிரியாமணி, நரேன் ஆகியோருடன் உருவாகி வருகிறது.
இப்படத்தின் பர்ஸ்ட் ரோர் கிளிம்ஸ் வீடியோ, விஜய்யின் 51-வது பிறந்தநாளான ஜூன் 22, 2025 அன்று வெளியிடப்பட்டு, 24 மணி நேரத்தில் 32.4 மில்லியன் பார்வைகளைப் பெற்று, அதிக பார்வைகளைப் பெற்ற முதல் தமிழ் பட வீடியோ என்ற சாதனையை படைத்தது.
இந்நிலையில், பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு, ஜனநாயகன் படம் குறித்து ஒரு பேட்டியில் சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்தார். “படத்தின் அப்டேட்களை ஜனவரி 9, 2026 ரிலீஸ் வரை ரகசியமாக வைக்க விஜய் கூறிவிட்டார்.
அவரது முழு பகுதியும் படமாக்கப்பட்டு முடிந்துவிட்டது. கடைசி நாளில் ஃபேர்வெல் வைக்க நினைத்தோம், ஆனால் விஜய் அதைத் தவிர்த்துவிட்டார்.
ஆனால், அவரது 69 படங்களில் இருந்து நடனக் காட்சிகளைத் தொகுத்து, படத்தின் இறுதியில் ஒரு சிறப்பு தொகுப்பாக வைத்துள்ளோம். ‘இதுவரை எனக்கு ஆதரவளித்தவர்களுக்கு நன்றி, உங்களிடம் இருந்து நான் பிரியவில்லை’ என்று விஜய் பேசுவது போன்ற ஒரு காட்சியும் உள்ளது.
இது ரசிகர்களை உணர்ச்சிவசப்படுத்தும் என்பதால், இதையும் ரகசியமாக வைத்துள்ளோம்,” என்று அவர் தெரிவித்தார்.விஜய், இந்தியாவின் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக, ₹275 கோடி பெற்றதாகவும், படத்தின் பட்ஜெட் ₹300 கோடி எனவும் கூறப்படுகிறது.
பாலாஜி பிரபு, “விஜய்யின் படம் என்றாலே பெரும் கூட்டம் கூடும். பொங்கல் விடுமுறையில் வெளியாகும் இப்படம் ₹1000 கோடிக்கு மேல் வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வெற்றி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் விஜய்யின் அரசியல் பயணத்திற்கு உதவும்,” என்று நம்பிக்கை தெரிவித்தார். இந்த பேட்டி, ஜனநாயகன் படத்தின் எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது.